
இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
பாலா நீட் அகாடமி சார்பாக புனித ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் வைத்து நடைபெற்றது.
ஸ்ரீ புரம் பஜார் ஜும்மா பள்ளிவாசல் தலைமை இமாம் முகமது அலியார் தலைமை வகித்தார். ஜனாப் அபூபக்கர் முன்னிலை வகித்தார். பாலா நீட்ட அகாடமி இயக்குனர் திரு ஷெரிப் வரவேற்புரை ஆற்றினார்.
சிறப்பு விருந்தினர்களாக ஊழிய ஸ்தானம் ஆசிரியர் பயிற்சி பள்ளி திருமதி ஜெய மேரி திருநெல்வேலி மாவட்ட கேபிள் ஆபரேட்டர் அசோசியேஷன் சங்க தலைவர் திரு அங்கப்பன் ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை இயற்பியல் ஆசிரியர் திரு கிருஷ்ணசாமி, பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளி முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி நேசம் பாரா மெடிக்கல் கல்லூரி இயக்குனர் திரு.அனிபா மானூர் தாலுகா TCOA தலைவர் கே சுவீட்டஸ் மானூர் தாலுகா பொருளாளர் திரு நியூ பிகின் பாளையங்கோட்டை தாலுகா தலைவர் திரு ஜெயக்குமார் முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிகளை அப்துல் ரகுமான் மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் காமைதீன் பிச்சை தொகுத்து வழங்கினார். குமாஸ்தா ஜோதிமணி மற்றும் மாணவ மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர் அனீஸ் பாத்திமா நன்றி உரையாற்றினார்.