May 12, 2025
ராயப்பன்பட்டியில் விவசாயிகளுக்கு வரைபடம் வரைந்து விழிப்புணர்வு பயிற்சி

ராயப்பன்பட்டியில் விவசாயிகளுக்கு வரைபடம் வரைந்து விழிப்புணர்வு பயிற்சி

நிலக்கோட்டை,மார்ச்.22-

மதுரை அரசு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் நிலக்கோட்டை குழு மாணவர்கள் கிராமப்புற விவசாய பணி அனுபவத் திட்டத்தின் மூலம் ஊரகப் பங்கேற்பு மதிப்பீடு சிறப்பு பயிற்சி திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை அருகே உள்ள கோட்டூர் கிராமம், இராயப்பன்பட்டியில் இறுதி ஆண்டு மாணவர்கள் கிராமப்புற விவசாயிகளுக்கு விவசாய பயிர்கள், செயல்பாடுகள், குறித்த விழிப்புணர்வு வரைபடம், விவசாயிகள் தினசரி வழக்கம், விவசாயத்தில் பருவ கால அட்டவணை, ட்ரான்சிட் நடைகள், பயிர் பிரச்சனை மரம் மற்றும் காலக்கோடு போன்றவற்றை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து நவீன விவசாயம் செய்வது பற்றி விழிப்புணர்வு சிறப்பு பயிற்சித்தனர்.

பின்னர் அக்கிராமத்தின் மண் வளங்கள், வரலாறு, பயிர் சாகுபடி மற்றும் விவசாயிகளின் குறைகளை மாணவர்கள் கேட்டறிந்தனர். இந்த விழிப்புணர் முகாமில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் ரெஜினா நாயகம், வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பிறை அறிவாளன்,பிரவீன், பிரேம் சங்கர்,பிரதீப், பவித்திரன்,சின்னதுரை, நவோதயன்,பவின்ராஜ், பிரகதீஸ்,முக்திகாந்த நாயக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.