
விரிவடையும் இந்தியா !
அகண்ட பாரதம் “உடையும் மியான்மர் இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் அண்டை நாடு? சீனா, ரஷ்யாவை மீறி ஒப்பந்தம்
மியான்மரை பொறுத்தவரை தற்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் என்பது இல்லை. ராணுவ ஆட்சி தான் நடக்கிறது.
கடந்த 2020ம் ஆண்டில் மியான்மரில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ராணுவ புரட்சி வெடித்தது. ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து 2021ம் ஆண்டு முதல் மியான்மரில் ராணுவம் தான் ஆட்சி செய்து வருகிறது
அதில் இருந்தே மியான்மரில் உள்ள பல பிரதேசங்கள் தனி நாடு கோரி அந்த நாட்டின் ராணுவத்துடன் பயங்கரமாக மோதி வருகின்றன. இப்படியான சூழலில் தான் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் தனித்தனியே மியான்மர் ராணுவம் மற்றும் கிளர்ச்சி படைகளுக்கு உதவி செய்து வரும் சூழலில் நம் நாடு சைலன்ட்டாக காய்நகர்த்தி சாதித்துள்ளது.
மியான்மர் நம் நாட்டின் அண்டை நாடாகும். இந்த நாடு இந்தியா, சீனா, தாய்லாந்து மற்றும் வங்கதேசத்துடன் எல்லையை பகிர்ந்து வருகிறது.
குறிப்பாக நம் நாட்டுடன் மொத்தம் 1,600 கிலோமீட்டர் எல்லையை பகிர்ந்து வருகிறது. இந்த எல்லைகள் என்பது வடகிழக்கு மாநிலங்களுடன் அதாவது மிசோரம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட 4 வடகிழக்கு மாநிலங்களுடன் மியான்மர் எல்லைகள் பகிர்ந்துள்ளது.
இந்த ராணுவ ஆட்சி என்பது ஜுண்டா ஆட்சி என்று அழைக்கப்பட்டு வருகிறது . இந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்காக கிளர்ச்சி படைகள் பல உருவாகி உள்ளன. அரக்கன் ஆமி, ரோஹிங்கியா பிரிவின் கிளர்ச்சி படைகள், சின் ஆர்மி உள்பட ஒவ்வொரு இனக்குழுவினரும் கிளர்ச்சி படைகள், சொந்த ராணுவத்தை உருவாக்கி உள்ளன. இவர்கள் மியான்மரின் ராணுவத்துக்கு எதிராக தொடர்ந்து புரட்சி செய்து வருகின்றனர்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு சீனா, ரஷ்ய நாடுகள் ஆதரவு வழங்கி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள துறைமுகங்கள் தான். தற்போது இந்த துறைமுகங்களில் சீனாவின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. இதனால் சீனாவுக்கு போட்டியாக ரஷ்யாவும் மியான்மர் ராணுவத்துக்கு ஆதரவு கொடுத்து வருகிறது.
அதாவது மியான்மர் ராணுவத்துக்கு சீனா பொருளாதார ரீதியாக உதவி செய்கிறது. ரஷ்யா விமானம், விமான பாகங்களை வழங்கி வருகிறது. கிளர்ச்சி படைகளில் ஒரு பிரிவினருக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. கிளர்ச்சி படையினரின் ஒருபிரிவினருக்கு இந்தியா ஆதரவு அளித்தது மட்டும் மல்லாமல் ராணுவ பயிற்சியும் வழங்கி வருகிறது. ரோஹிங்கியா கிளர்ச்சி படைகளுக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தின் ஆதரவு என்பது உள்ளது.
இந்தியாவை எடுத்து கொண்டால் ரோஹிங்கியா கிளர்ச்சி படைகளை தவிர அரக்கன் ஆர்மி உள்ளிட்ட பிற கிளர்ச்சியாளர்களுக்கும், மியான்மர் ராணுவத்துடன் நல்ல உறவு என்பது உள்ளது. இப்படி மியான்மரில் தற்போது பல்வேறு நாடுகளின் தலையீடு என்பது உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, சீனா, ரஷ்யா என்று 3 பெரும் வல்லரசுகளின் நேரடி தலையீடு மியான்மரில் உள்ளது.
இதனால் தான் மியான்மரில் இன்னும் கொந்தளிப்பான சூழல் என்பது ஏற்பட்டு வருகிறது.
இதில் அமெரிக்கா இதைவிட்டு ஒதுங்கி விட்டதாக தெரிகிறது. அந்த பகுதி பிரதேச பிரச்சனைகளை இனி மோடி பார்த்து கொள்வார் என்று அமெரிக்கா சொல்லி விட்டது
இப்படியான சமயத்தில் தான் தற்போது இந்தியா மாஸ்டர் பிளானை கையில் எடுத்து வெற்றிக்கரமாக சாதித்துள்ளது
. அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. தமிழ்நாட்டின் ஆளுநராக விகே சிங் நியமிக்கப்படுகிறார், தற்போதைய ஆளுநர் ஆர்என் ரவி மாற்றம் செய்யப்பட்டு மிசோரம் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படுகிறார் என்ற தகவல் பரவியது. ஆனால் அது நடக்கவில்லை. மாறாக
மாஜி ராணுவ தளபதியும், முன்னாள் மத்திய அமைச்சருமான விகே சிங் விகே சிங் மிசோரம் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறார். விகே சிங் மிசோரம் ஆளுநராக பொறுப்பேற்றதன் பின்னணியில் மியான்மர் விவகாரம் தான் உள்ளதாக கூறப்பட்டது.
அது மட்டுமின்றி மிசோரம் ஆளுநர் விகே சிங்கின் செயல்பாடும் இதில் உள்ளது . விகே சிங் முன்னாள் ராணுவ தளபதி என்பது மட்டுமின்றி பிரதமர் மோடி அமைச்சரவையில் மத்திய கிழக்கு பிராந்திய மேம்பாட்டு துறை (தனி அதிகாரம்) அமைச்சராகவும் செயல்பட்டார் . இதனால் மிசோரம் மாநில முதல்வர் லால்முவான்புயாவுடன் அவருக்கு நெருக்கமான உறவு என்பது உள்ளது. இருவரும் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக சொல்லப்படுகிறது..
அதனை உறுதி செய்யும் வகையில் தான் மிசோரம் மாநிலத்துக்கு அடிக்கடி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சென்று வந்தார். இருவரும் மியான்மர் விவகாரம் பற்றி விரிவாக விவாதித்தனர்.
அதன்பிறகு கடந்த மாதம் மிசோரமை சேர்ந்த மிசோ தேசிய முன்னணி எனும் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்பி வன்லல்வேனா மிசோரம் சென்று ‛சின்லேண்ட் கவுன்சில் எனும் கிளர்ச்சி படை ராணுவத்தை சந்தித்தார். இந்த சின்லேண்ட் கவுன்சில் என்பது வடக்கு – மேற்கு மியான்மரை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். அந்த படையினரின் முக்கிய அதிகாரிகளை அவர் சந்தித்து இந்தியாவின் ஒருபகுதியாக மாற சம்மதிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை என்பது அதிக கவனம் பெற்றது.
அதன்படி நம் நாட்டின் மிசோரம் முதல்வர் முன்னிலையில் மியான்மர் கிளர்ச்சி ராணுவத்தினர் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் நம் நாட்டின் ஒருபகுதியாக மியான்மர் இணைகிறதா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. இதற்கிடையே தான் முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது மியான்மர் – மிசோரம் எல்லையில் சின் பிரதேசம் உள்ளது. இங்கு பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் தனித்தனியாக பிரிந்து சண்டையிட்டு வந்தனர். குறிப்பாக சிசி எனும் சின்லேண்ட் கவுன்சில் (chinland Council or CC) மற்றும் ஐசிஎன்சிசி இன்டிரீம் சின் நேஷனல் கன்சல்டேட்டிவ் கவுன்சில் (Interim Chin National Consultative Council). இவர்கள் 2 பேருக்கும் தனித்தனியே ராணுவம் உள்ளது. அடிக்கடி மோதி கொள்வார்கள். தற்போது இந்திய முயற்சியால் சிசி மற்றும் ஐசிஎன்சிசி ராணுவத்தினர் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். இதற்கான ஒப்பந்தம் என்பது கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தம் நம் நாட்டின் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் மாநில முதல்வர் லால்முவான்புயா புந்தே (மிசோ தேசிய கட்சி) முன்னிலையில் கையெழுத்தாகி உள்ளது.
நீண்டகாலமாக 2 குழுக்களை சமாதானம் செய்ய மிசோரம் முதல்வர் லால்முனான்புயா முயற்சி மேற்கொண்ட நிலையில் அது இப்போது சாத்தியமாகி உள்ளது. இது நம் நாட்டுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் மிசோரம் முதல்வர் லால்முவான்புயா புந்தே முக்கிய பங்கு வகிக்கிறார். இதனால் தான் நீண்டகாலமாக இருந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்து சிசி, ஐசிஎன்சிசி குழுக்களை ஒன்றிணைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவிற்க்கு என்ன நன்மை என்பதையும் பார்ப்போம்..
இந்தியாவை எடுத்து கொண்டால் மிசோரம் மற்றும் மணிப்பூரில் சின் மக்கள் அதிகம் உள்ளனர். மியான்மரில் அரக்கன் ஆர்மியின் கட்டுப்பாட்டில் உள்ள ரக்கைன் பகுதியிலும் சின் மக்கள் உள்ளனர். இந்த அரக்கன் ஆர்மி இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது
இந்நிலையில் தான் மியான்மரில் உள்ள சிசி மற்றும் ஐசிஎன்சிசி அமைப்பை சேர்ந்தவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி அதன்மூலமாக அவர்கள் 2 பேரையும் மியான்மரில் சேர்ந்து பணியாற்றும் வகையில் ஒப்பந்தம் என்பது கையெழுத்தாகி உள்ளது.
அதோடு இந்த ஒப்பந்தம் என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக
1 ) மியான்மருடன், மிசோரம் 500 கிலோமீட்டர் வரை எல்லைப்பகுதியை பகிர்ந்து வருகிறது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
2 ) ரோஹிங்கியாக்களின் ஊடுருவலை தடுக்க முடியும். இந்த சின் ராணுவத்தின் எதிரி என்று பார்த்தால் ஒன்று மியான்மரின் ராணுவம். இன்னொன்று ரோஹிங்கியா கிளர்ச்சி படையினர்.
இதில் பாக்கிஸ்தான் ஆதரவு பெற்ற ரோஹிங்கியா கிளர்ச்சி படை ஏற்கனவே வீக்காக உள்ளது. தற்போது மியான்மரில் சீனா ஆதரவு பெற்ற ராணுவமும் பலம் குன்றி வருகிறது. ஆனால் இந்திய ஆதரவு பெற்ற அரக்கன் ஆர்மி, சின்லேண்ட் கவுன்சில் படைகள் மிகவும் வலுவாக உள்ளது இதனால் இந்த கிளர்ச்சி படைகளுக்கு பயந்து மியான்மர் ராணுவம் வெளியேறி வருகிறது.
ரக்கைன் பகுதியை மையப்படுத்தி அரக்கன் ஆர்மி தனி நாடு கோருவது போல் சின் மக்களும் தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால் உண்மையில் தனிநாடு உருவாக வேண்டும் என்றால் பெரும் சவால் இருக்கிறது. அதுமட்டுமின்றி தனிநாடாக உருவாக்கினாலும் கூட அண்டை நாடுகளாக உள்ள சீனா, வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியாவை சார்ந்து இருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு நாட்டுடன் நெருக்கம் காட்டினால் மற்றவர்களுடன் மோதலை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். இதனால் தற்போது இந்த மக்களுக்கு 3 ஆப்ஷன் தான் உள்ளது.
ஒன்று மியான்மருடன் இணைந்து இருப்பது. இன்னொன்று வங்கதேசத்துடன் இணைந்து இருப்பது. மற்றொன்று இந்தியாவுடன் இணைந்து இருப்பது.
அரக்கன் ஆர்மி மற்றும் சின்லேண்ட் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் என்பது சீனா எல்லையையொட்டி வரவில்லை. இந்தியா – வங்கதேச எல்லையில் தான் வருகிறது. இதனால் இவர்களுக்கு இந்தியா அல்லது வங்கதேசம் தான் சாய்ஸாக உள்ளது.
ஏற்கனவே மியான்மருடன் சேர்ந்து இருக்க முடியாது என்று தான் அவர்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக உள்நாட்டில் போர் புரிந்து வருகின்றனர். இதனால் மியான்மரை விட்டு விடலாம். அடுத்ததாக வங்கதேசம். அங்கும் இடைக்கால அரசு ஆட்சி தான் நடக்கிறது. சட்டம் – ஒழுங்கு என்பது சரியில்லை. பொருளாதார வளர்ச்சி இல்லை. இதனால் அவர்கள் வங்கதேசத்துடன் இணைய விரும்பவில்லை.
மாறாக இந்தியா பெஸ்ட் சாய்ஸாக உள்ளது. நிலையான ஆட்சி, பொருளாதார பலம், உலக நாடுகளிடம் செல்வாக்கு உள்ளிட்டவை இந்தியாவுக்கு உள்ளது. அங்குள்ள மக்களும் அதையே விரும்புவதாக தெரிகிறது..
மியான்மரில் கிளர்ச்ச படையினரும் தொடர்ந்து இந்தியாவையே ஆதரிப்பது உள்ளிட்டவை நம் நாட்டுக்கு பாசிட்டிவ்வாக பார்க்கப்படுகிறது. இதனால் சின் லேண்ட் கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி விரைவில் நம் நாட்டுடன் இணைக்கப்படுகிறதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்படுகிறது.
இது நடக்கும் பட்சத்தில் அகண்ட பாரதம் என்ற முதல் படி வெற்றி பெற்றதாக கருதப்படும். இருப்பினும் ஒரு நாட்டின் பகுதியை இன்னொரு நாட்டுடன் இணைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.
இதனால் இந்த விவகாரத்தில் நாம் இன்னும் கொஞ்சம் காலம் காத்திருக்க வேண்டும். இருப்பினும் தற்போதைய சூழலில் மியான்மரில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள சின் லேண்ட் கவுன்சில் நம்நாட்டுடன் செயல்பட்டு வருவது என்பது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
விரைவில் பாரதம் 30+ மாநிலங்கள் என ஆகுமா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அடுத்த இரண்டு மூன்று வருடங்கள் பாரதத்தை சுற்றி பெரும் மாற்றங்கள் வரக்கூடும்.