
தமிழகம் முழுவதும் கட்டப்பஞ்சாயத்து செய்யும் போலீஸ் நிலைய அதிகாரிகள்!
போலீசார் தறிகெட்டு போன சட்ட ஒழுங்கு அமைதியான தமிழகம் எப்போது திரும்பும் பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
இந்தியாவில் உள்ள எத்தனையோ மாவட்டங்களில் தமிழகம் என்றால் ஒரு அமைதி பூங்காவான மாநிலமாகவும், தமிழக போலீசாரை உலக அளவில் இரண்டாம் இடத்தில் போற்றக்கூடிய மிகத் திறமையான போலீசாகவே தமிழகத்தில் திகழ்ந்து வருகின்றனர். அப்படிப்பட்ட தமிழகம் கடந்த இரண்டு மாதங்களாக நெல்லையில் ஒருவர் அதுவும் ஓய்வு பெற்ற போலீஸ்காரர் அதுமட்டுமல்ல தொழுகைக்குச் சென்று விட்டு வெளியே வந்தவரை அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் சமூக சேவை செய்தார் என்பதற்காக வெட்டி கொலை செய்திருக்கிறார்கள்.
அந்த கொலை செய்யப்பட்ட நபர் என்னை கொலை செய்து விடுவார்கள் என்று ஒரு தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் முதலமைச்சர அய்யா அவர்களின் வீட்டில் உணவு அருந்தி இருக்கிறேன் என் உயிரை காப்பாற்றுங்கள் என்று வீடியோ பதிவு செய்திருக்கிறார். அந்தச் சூழ்நிலையில் கூட போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எங்கே செல்கிறது தமிழகம்.
அதேபோன்று முன்னாள் ரவுடியாக வலம் வந்த ஒருவரை பட்டப் பகலில் அதுவும் நான்கு வழிச்சாலையில் காருக்குள் வைத்து மனைவி முன்பு எந்தவிதமான அச்சமும் இன்றி இளைஞர்கள் வெட்டி குவிக்கும் காட்சி வலைதளங்களில் சர்வ சாதாரணமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு கூட யாரும் முன்வர முடியவில்லை அந்த அளவுக்கு தினந்தோறும் கொலை நடப்பது தமிழகத்தில் சர்வ சாதாரணமாக போய்விட்டது.
கொலை செய்து விடுவார்கள் என்று வீடியோ பதிவு செய்த அந்த சமூக ஆர்வலர் யார் மீது புகார் கொடுத்திருந்தாரோ அவரை கைது செய்திருந்தால் கட்டப்பஞ்சாயத்து பேசாமல் கொலை நடந்திருக்க வாய்ப்பில்லை. இதையெல்லாம் மீறி கொலை செய்யப்பட்ட ஓரிரு நாளில் அந்தக் கொலை செய்ய காரணமாக இருந்த ஒருவரை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்திருக்கிறார்கள் போலீசார்.
அதற்கு முன்னதாகவே சமூக ஆர்வலரும், முன்னாள் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆன அவர் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால் கொலை நடந்திருக்காது. ஆனால் அலட்சியமாக போலீசார் நடந்த காரணத்தால் தான் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்ற விவரம் தெரிந்து அந்த போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் சப்-இன்ஸ்பெக்டர் எல்லாம் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று பவானி அருகே ரவுடியை வெட்டி பட்டப்பகலில் வீழ்த்திய சம்பத்தில் தற்போது 5 நபர்களை கைது செய்து இருக்கிறார்கள். அதேபோன்று மதுரைப் பகுதியில் ஒரு தனி பிரிவில் போலீசாராக பணியாற்றும் ஒருவரை எரித்துக் கொலை செய்திருக்கிறார்கள் என்பது மிகவும் கொடூரம் செயலாகவே கருதப்படுகிறது. இப்படி தினந்தோறும் கொலை, கொள்ளை, கஞ்சா வியாபாரம், மது போதை வியாபாரம், தடை செய்யப்பட்ட குட்கா லாட்டரி சீட்டு இப்படி ஏராளமான சட்டவிரோத செயல்கள் தான் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
தினம்தோறும் காட்சிகளாக காண்கின்றோம். இதனால் தமிழகத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் மனு கொடுக்கப்பட்டால் உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் ஹை கோர்ட் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்ய வேண்டுமே ஒழிய கட்டப்பஞ்சாயத்துக்கள் பேசியும் அரசியல் வாதிகளின் கைக்கூலியாக போலீசார் செயல்படுவது எந்த விதத்திலும் முறையான சட்ட பாதுகாப்பாக கருத இயலாது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். சமூகத்தில் நடக்கின்ற சில சந்தர்ப்பவாதிகளின் செயல்களால் தமிழக முழுவதும் தற்போது கொலை கொள்ளை மது போதை என்ற நிலைப்பாட்டில் மாறி இருக்கும் இந்த தமிழகம் எப்போதும் அமைதியான தமிழகமாக திரும்பும் என்ற எதிர்பார்ப்பையும் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கேள்வியாக முதலமைச்சருக்கு மனதால் தினம்தோறும் குமரிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
தமிழகத்தில் போலீஸ் நிலையங்கள் போலீஸ் நிலையங்களாக இல்லாமல் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நிலையங்களாக தமிழக முழுவதும் உள்ள போலீஸ் செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த சட்டமன்றத் கூட்டத்தில் ரவுடிகளை உடனடியாக இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு போட்டிருப்பது வரவேற்கத்தக்க வகையில் இருந்தாலும். இத்தனை ஆண்டுகள் இல்லாமல் கடந்த நான்காண்டுகள் மட்டும் போலீஸ் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து நிலையங்களாக மாறியது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள்.
எனவே தமிழக முதல்வர் போடப்பட்ட அந்த உத்தரவு இங்கு ரவுடிகளை விட இங்க அரசியல்வாதிகளின் தொல்லைகள் தான் அதிகமாக இருக்கிறது எனவே தாங்கள் தலைமையின் கீழ் இருக்கக்கூடிய நபர்களின் புள்ளி விவரங்களை சேகரித்து தமிழகம் எப்போதும் அமைதி பூங்காவாக திகழ தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தமிழக மக்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது என்பது தான் உண்மையான சாலச் சிறந்த கோரிக்கையாகும். இன்றைக்கு நீதிபதிகள் முதல் ஆண்டி வரை மிரட்டப்படாதவர்களை கிடையாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு இன்றைய தமிழக மாறி இருக்கிறது.
காரணம் போலீஸ் போலீஸ் ஆக செயல்படவில்லை ஏதோ கட்டப்பஞ்சாயத்து பண்ணும் புரோக்கர்கள் போன்று செயல்படுவதால் தான் இந்த நிலை என்று ஒவ்வொரு நாளும் நாட்களை எண்ணிக்கொண்டு தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்பது தமிழக முதலமைச்சருக்கு தெரியுமா? தெரியாதா? என்ற கேள்விக்களையோடு அன்றாட உணவுக்காக அல்லோலப்படும் இந்த மக்களின் நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.