April 19, 2025
திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு பழனிஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓரங்க நாடகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு பழனிஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓரங்க நாடகம் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், அருள்மிகு பழனிஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் இன்று (13.03.2025) திண்டுக்கல் மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் ஏரன் பவுண்டேசன் தன்னார்வ தொண்டு நிறுவனம், மதுரை இணைந்து போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாகவும் DRUG FREE TAMIL NADU என்ற செயலி பயண்பாட்டு தொடர்பாகவும் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களால் ஓரங்க நாடகம் நடத்தப்பட்டது.

மேற்படி விழிப்புணர்வு நிகழ்ச்சியானது திண்டுக்கல் மாவட்ட உதவி ஆணையர் (கலால் ) திரு இரா.பால்பாண்டி மற்றும் முனைவர் இரா.இரத்தினசாமி, பழனி ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி முதல்வர்(பொறுப்பு), முனைவர் இரா.ரவிசந்திரன், இணை பேராசிரியர், வரலாற்று துறை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் ஏரன் பவுண்டேசன் நிறுவனர் முனைவர் ராஜேஸ் நல்லையா செயலர் பூர்ணம், பழனி கோட்ட கலால் அலுவலர் M. வடிவேல் முருகன் மது விலக்கு காவல் ஆய்வாளர் சரவணன் ஆகியோரும், பத்து போராசியர்களும் மற்றும் 300 மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு Drug Free TN குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.