
15-வயது சிறுமியை திருமணம் செய்து உறவினர்களுடன் சேர்ந்து கொடுமை படுத்திய கணவன் போக்சோ சட்டத்தில் கைது.
தென்காசி,மார்ச்.13: வாசுதேவநல்லூர் அடுத்த சிவகிரியைச்சேர்ந்த ஒருவர் தனது 15 வயதுடைய மகளை காணவில்லை என, காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்த நிலையில். கடையநல்லூர்-வலசையை சேர்ந்த செல்வம் தன்னை காதல் திருமணம் செய்த கணவர் மற்றும் அவரது உறவினர்கள் கொடுமை படுத்துவதாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற சிறுமி அங்குள்ள காவல்நிலையத்தில் புகார்.தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகில் சிவகிரியை சேர்ந்த ஒருவர் தனது 15 வயதுடைய மகளை காணவில்லை என,சிவகிரி காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் புகார் அளித்தார்.
அதன் பேரில், சிறுமியைத்தேடி வந்தனர்.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்கள் முன்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவல்நிலையத்துக்கு சென்ற அந்த சிறுமி,தன்னை கடையநல்லூர் அருகே வலசையில் உள்ள ஜக்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா மகன் செல்வம் (19) என்பவர் தன்னை அழைத்து வந்து திருமணம் செய்ததாகவும் அவரது உறவினர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் புகார் செய்தார்.இது குறித்து குமாரபாளையம் போலீசார் அளித்த தகவலின் பேரில், சிவகிரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் வரதராஜன்,காவலர்கள் சிவஞானபாண்டியன் ,சுதா ஆகியோர் சென்று சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது,சிறுமியை செல்வம் என்பவர் திருமணம் செய்ததும், அவரது உறவினர்கள் சிறுமியை கொடுமை படுத்தியதும் தெரியவந்திருக்கிறது.இது தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து செல்வத்தை கைது செய்தனர்.அவருக்கு உடந்தையாக இருந்த அதாவது பெண்ணின் திருமண வயது சட்டத்தின் படி18 என்று இருக்கும் பட்சத்தில் 15 வயதுடைய சிறுமியை திருமணம் செய்ய உடந்தையாக இருந்தாகவும்,கொடுமை படுத்தியதாகவும் சொல்லப்படுகிற செல்வத்தின் உறவினர்களான வலசை ஜக்கம்மாள் கோவில் தெருவை சேர்ந்த முத்தையா மனைவி காளியம்மாள் (40),கிருஷ்ணசாமி மகன் முருகன் (39), முருகன் மனைவி முத்துலட்சுமி ஆகியோரை கைது செய்தனர்.