
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பாலியல் தடுப்பினை வலியுறுத்தி சாதனை மாணவி ஷாஜிதா தேசிய கொடியுடன் செங்கல் தாங்கலில் விழிப்புணர்வு யோகாசனம்.
தென்காசி :
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாலியல் தடுப்பினை வலியுறுத்தி கடையம் அருகே 6-ஆம் வகுப்பு மாணவி சாதனைச்சுடர் ஷாஜிதா ஜைனப் என்பவர் அலங்கரித்த வண்ண கோலங்கள் நடுவே செங்கல் தாங்கலில் அமர்ந்து கையில் தேசிய கொடியுடன் பாலியல் தடுப்பின் அவசியத்தை பொது விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் யோகாசனத்தில் ஈடுபட்டார்.

தென்காசி மாவட்டம் கடையம்-இரவணசமுத்திரம் எனும் ஊரைச்சேர்ந்த மளிகைக்கடை ஊழியர் முகம்மது நஸீருதீன்-ஜலிலா தம்பதியரின் மகள் யோகாவில் சாதனைச்சுடர் விருது பெற்ற ஷாஜிதா ஜைனப்,குற்றாலம் செய்யது மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 6-ஆம் வகுப்பு ஸ்காலர்ஷிப் பெற்று பயின்று வருகிறார்.

இவர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நாடேங்கும் பல்வேறு பகுதிகளில் சிறுமிகள் பாலியல் ரீதியாக தொடர்ந்து தொந்தரவுகளுக்கு ஆளாகி வருவதை நினைவு கூர்ந்து இதை தடுக்க வலியுறுத்தியும், இதற்கு பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தங்கள் பிள்ளைகளுக்கு அடுத்தவர்கள் தம் மீது பழகும் விதம் தவறு என்கிற பட்சத்தில் தங்கள் பெற்றோரிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் என பாலியல் தொந்தரவுக்கு ஆளாகாமல் இருக்க இதன் சம்பந்தப்பட்டவைகள் குறித்தும் பெண் குழந்தைகளின் இந்த வன்கொடுமை பாதிப்புகளிலிருந்து தடுக்க வலியுறுத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தரையில் வண்ணக் கோலமிட்டு அதில் செங்கல்களை செங்குத்தாக வைத்து கையில் தேசிய கொடியுடன் அமர்ந்து யோகாசனத்தில் ஈடுபட்டார்.
இந்த ஷாஜிதா ஜைனப்.பல்வேறு யோகா,ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகள் மட்டுமில்லாமல் பல சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டும்,பல வகையான விருதுகள் வாங்கி குவித்து வரும் சிங்கப்பெண் விருது பெற்ற மிஸ்பா நூருல் ஹபிபாவின் தங்கை ஆவார்.மேலும்,இந்த அக்கா,தங்கை மதநல்லிணக்கம் உள்ளிட்ட இது போன்ற பல சமூக நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு வருவதும், சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள சாம்பியன் புக் ஆஃப் வோர்ல்ட் ரிக்கார்ட் நிறுவனம் இந்த சகோதரிகளுக்கு உலக சாதனை சான்றிதழ் வழங்க முன் வந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த பாலியல் தொந்தரவு தடுப்பு நிகழ்வில் யோகாசனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈடுபட்ட ஷாஜிதா ஜைனப்பிற்கு அனைத்து தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.