
பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
பழனியில் மக்கள் உரிமைகள் கழகம் சார்பில் மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக பழனி காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண்கள், மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணி புரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் என அனைவருக்கும் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் மாநில பொறுப்பாளர் பரிதா ஷேக் முகமது , ஷேக் முகமது மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்