
கண்கலங்கி பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர்.
தாராபுரம் மூலனூரில் இந்தி திணிப்புக்கு எதிராக திமுகவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலைஞர் மற்றும் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து பேசுகையில் கண்கலங்கி பேச முடியாமல் அழுது கொண்டே வெள்ளை கைக்குட்டையில் முகத்தை துடைத்துக் கொண்டு பேசினார்.
திருப்பூர் கிழக்கு மாவட்டம், மூலனூர் பேரூர் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் மாவட்ட இளைஞரணி சார்பாக மத்திய அரசின் இந்தி திணிப்பு,நிதிப்பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி இழைக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து
தாராபுரம் தொகுதி பொதுக்கூட்டம் மூலனூர் பேருந்துநிலையம், அருகில் திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளரும் செய்திதுறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்புரையாற்ற மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மாநில மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தலைமைக் கழக பேச்சாளர் கவின் குமார், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டல தலைவருமான இல.பத்மநாபன், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் இ.கே. பிரகாஷ், ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சிக்கு
மூலனூர் திமுக பேரூர் கழகச் செயலாளர் மக்கள் தண்டபாணி வரவேற்பு உரையாற்றினார்.
மேலும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணைச் செயலாளர் கார்த்தி, தாராபுரம் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ். வி.செந்தில்குமார். தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், சின்னக்கம்பாளையம் பேரூர் கழக செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், கொளத்துப்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் கே.கே. துரைசாமி, ருத்ராவதி பேரூர் கழகச் செயலாளர் அன்பரசு மூலனூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் துறை தமிழரசு ,மூலனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, கன்னிவாடி பேரூர் கழகச் செயலாளர் சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன்.பேசுகையில், மூலனூர் தாராபுரம் சட்டமன்ற தொகுதி மக்களை பல ஆண்டுகளுக்கு பிறகு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவராக சந்திப்பதில் பெருமிதம் அடைகிறேன் உங்கள் பகுதியில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தான் நான் முதலில் சட்டமன்ற உறுப்பினராக கோட்டைக்குள் நுழைந்தேன் மேலும் கழக தளபதியார் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் என்ற வார்த்தைகளை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில் கண்கலங்கி கண்ணீர் விட்டு பேச முடியாமல் வாய் தடுமாறி தனது கைக்குட்டையால் முகத்தினை துடைத்துக் கொண்டு கண்ணீரையும் உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு மீண்டும் பேச தொடங்கினார் அப்போது ”மொழிக்காக பலர் தங்களது இன்னுயிரை தந்துள்ளனர்.
அந்த உணர்வோடுதான் முதல்வர் போராடி வருகிறார்.
இந்தியாவிலேயே அனைத்து கட்சிகளையும் ஒருசேர கூட்டிய பெருமை முதல்வருக்கு தான் உண்டு. ஒன்றிய அரசு ஒரு சிறுகோட்டை போட சொல்லி அதனருகில் பெரிய கோட்டை போட முயலுகிறது. இதற்கு நாம் பலியாகமாட்டோம். எதிர்த்து நிற்போம்” என்றார். அமைச்சர் மேலும் திருப்பூர் மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன். பேசுகையில், இந்தி மொழிக்கு எதிராக போராடி வருபவர் நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். ஆனால் எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் இல்லை அவர் கூவத்தூரில் சசிகலாவின் காலில் தவழ்ந்து விழுந்து முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிச்சாமி அவர் கடந்த நான்கு ஆண்டுகளில் 13,முறை தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. மேலும் 234 தொகுதிகளில் பணம் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 200, தொகுதிகளில் வெற்றி பெறும் என தளபதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதற்கான வேலைகளை நாம் செய்ய வேண்டும் என இவ்வாறு அவர் பேசினார். இந்த பொதுக்கூட்ட விழாவிற்கு தாராபுரம் குண்டடம் மூலனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 2000-த்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில் அதிமுக- அமமுக-பிஜேபி- தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர். அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.