April 16, 2025
எங்கே செல்கிறது தமிழகம் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?வேலூர் அருகே ஆடையின்றி நின்ற போலீஸ்காரர்.. எகிறி ஓடிய பெண்கள்!

எங்கே செல்கிறது தமிழகம் மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?வேலூர் அருகே ஆடையின்றி நின்ற போலீஸ்காரர்.. எகிறி ஓடிய பெண்கள்!

வேலூர் பிப். 28.ஆடிப்போன குடியாத்தம் அரசு மருத்துவமனை கண்ணாடியை அடித்து முடிக்க போலீசார் வேலூர் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது..

இது தொடர்பான விசாரணையையும் கே.வி. குப்பம் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி என்ன நடந்தது ஸ்டேஷனில்? நேற்று முன்தினம், வேலூர் மாவட்டம், காட்பாடியிலிருந்து குடியாத்தம் நோக்கி தனியார் ஷு கம்பெனி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது… சேட்டு என்பவர் அந்த வேனை ஓட்டி சென்றதாக தெரிகிறது.
பி.கே.புரம் அருகே சென்றபோது, பைக்கில் எதிரே வந்த போதை நபர், திடீரென வேனை மறித்து, வேன் டிரைவரிடம் சண்டை போட்டுள்ளார்..தகாத வார்த்தைகளிலும் திட்டியிருக்கிறார. மினி வேன் டிரைவர் தான் ஒரு போலீஸ்காரர் என்று கூறிய அந்த நபர், வேன் டிரைவரை கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே அடிக்கவும் பாய்ந்துள்ளார்.பிறகு, வேன் டிரைவரின் கையை பிடித்துக் கொண்டு, கே.வி.குப்பம் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து சென்றார்.

அங்கிருந்த போலீஸாரிடம், “என்மேல மோதுற மாதிரியே வேன் ஓட்டிட்டு வந்ததால், இவன் மேலயும், இவன் ஓட்டி வந்த வேன் மேலயும் கேஸ் போடுங்க” என்று கூச்சலிட்டார்.. இதனால் அதிர்ந்து போனபோலீஸ்காரர்கள், அந்த போதை நபர் யார் என்று விசாரித்தபோது, ஒருகணம் அதிர்ந்து போய்விட்டார்கள்.

காரணம், அந்த போதை நபர், நிஜமாகவே போலீஸ்காரராம்.. அவரது பெயர் அருண்கண்மணி.. காட்பாடி விருதம்பட்டு போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்து கொண்டிருக்கிறாராம்.. பிறகு, அவர் சொன்ன புகார் குறித்தும் போலீசார் விசாரித்தபோது, வேன் டிரைவர் மீது எந்த தவறும் இல்லை என்பது உறுதியானது. எனினும், அருண்கண்மணி போதையில் இருந்ததால், அவரை கே.வி.குப்பம் போலீஸார் எச்சரித்தனர்..

ஆவேசத்தின் உச்சக்கட்டம் உடனே இதைக்கேட்டு, போதை போலீஸ்காரர் ஆவேசமாகிவிட்டார்.. திடீரென தன்னுடைய டிரஸ் அனைத்தையும், கடகடவென கழட்டி வீசிவிட்டு நிர்வாணமாக நின்றார். அந்த வேன் டிரைவர் மீது FIR போட்டால்தான் டிரஸ்ஸை மறுபடியும் அணிந்து கொள்வேன் என்று மிரட்டினார்.. இப்படி நிர்வாண கோலத்தில் போலீஸ்காரர் நிற்பதை பார்த்ததுமே, அங்கிருந்த பெண் போலீசார், ஸ்டேஷனைவிட்டு அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவிட்டார்கள்.ஒருகட்டத்துக்கு மேல் போதை போலீஸ்காரரின் சேட்டை தாங்காமல், நிர்வாண கோலத்திலேயே லாக்கப்பில் தள்ளி, வீடியோ எடுத்துள்ளனர்.. அப்போதும் அசராத போதை போலீஸ்காரர், “அந்த வேன் டிரைவர் எங்கே? இப்பவே விசாரணை பண்ணு..இந்த வீடியோ எஸ்.பி வரைக்கும் போயாகணும்..எல்லாத்தையும் எஸ்.பி. விசாரிக்கணும்.. அதுவரை டிரஸ் போட மாட்டேன்” என்று லாக்கப் கதவை வேகமாக பிடித்து ஆட்டி கத்தினார்.

நொறுங்கிய கார் கண்ணாடிகள் பிறகு அவரிடம் மெல்ல பேச்சு தந்த கே.வி.குப்பம் போலீஸார், ஒருவழியாக அவருக்கு டிரஸ் அணிவித்து, மதுபோதை பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், அங்கிருந்த அரசு மருத்துவர்களையும் அசிங்கமாக பேசிய போதை போலீஸ்காரர், மருத்துவமனை ரூமிலிருந்த கண்ணாடி கதவையும் கையாலேயே அடித்து நொறுக்கினார். இதைப்பார்த்து அந்த ரூமிலிருந்த நோயாளிகள், பதறியடித்து கொண்டு ஓடினார்கள். இதற்கு மேல் பொறுமையிழந்த கே.வி.குப்பம் போலீஸார் அருண்கண்மணி மீது 2 வழக்குகளை பதிவு செய்து, கைது செய்துள்ளனர்.போதையில் அட்டகாசம் இந்த போலீஸ்காரர் ஏற்கனவே, பல இடங்களில் போதையில் தகராறு செய்திருக்கிறாராம்.. சாப்பிட்டுவிட்டு, காசு தர மாட்டாராம்.. அப்படியே யாராவது காசு கேட்டால் அடித்துவிடுவாராம்..

இப்படித்தான் சாப்பிட்டுவிட்டு காசு தராமல் போனதால், ஒரு பானிபூரி வியாபாரி, இவர் மீது குடியாத்தம் போலீஸில் புகார் தந்துள்ளார்.. இந்த புகார், எஸ்.பி. வரை சென்று, அருண்கண்மணியை சஸ்பெண்ட் செய்துவிட்டாராம்.. இப்போது மறுபடியும் டியூட்டிக்கு வந்துள்ள நிலையில்தான், இவ்வளவு அட்டகாசமும் நடந்துள்ளது.
.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.