
பழனியில் பாலியல் அத்துமீறலை எதிர்த்ததால் ரயில்வே பெண் காவலர் பணிமாறுதல் - பெண் காவலர் ராஜினாமா கடிதம் அனுப்பிவிட்டு ஆடியோ வெளியிட்டார்- பெண் போலீஸ் குற்றச்சாட்டு ஆடியோ வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர் காவல்துறையில் பணியாற்றிய வருகிறார். பழனி இரும்பு பாதை காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக பணிபுரிந்து வந்துள்ளார். சமீபத்தில் அவருக்கு பணியிடை மாறுதல் வழங்கப்பட்டுள்ளது. அதில், 160 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்சி இரும்பு பாதை காவல்நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பார்த்த அந்த பெண் காவலர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பணியிட மாற்றம் செய்யப்பட்டதில் பல்வேறு காரணங்கள் அடங்கி இருக்கின்றன. சம்பந்தப்பட்ட பெண் காவலரை திட்டமிட்டு பழிவாங்கப்படுவதாகவும் , சக அதிகாரிகளை மதிப்பதில்லை எனவும் தகவல் கூறப்படுகிறது. ஆனால் , அதிலும் பல பொய்யான தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்ச்செல்வி என்கிற பெண் காவலர் மீது வைக்கப்பட்ட புகார்கள் மீது முறையான விசாரணை எதுவும் செய்யாமல் ஒருதலைப்பட்சமாக முடிவு எடுக்கப்பட்டு, இடம் மாறுதல் வழங்கப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டை விசாரணை செய்யாமல் இடம் மாறுதல் வழங்கப்பட்டதை சம்பந்தப்பட்ட பெண் காவலர் ஒரு தண்டனையாகவே கருதுகிறார்.

மேலும், பழனி நீதிமன்ற காவலராக பணியாற்றிய தமிழ்ச்செல்வி திடுக்கிடும் சில தகவல்களை கூறியுள்ளார். அதில், அவருடைய மேலதிகாரி தன்னிடம் தனிப்பட்ட முறையில் அலைபேசியில் பேசுங்கள். இல்லையென்றால் நீதிமன்ற அலுவலக பணியிலிருந்து எடுத்து விடுவேன் என மிரட்டியுள்ளார். அதற்கு அந்த பெண் காவலர் தாராளமாக எடுத்து விடுங்கள் எனக்கூறியுள்ளார்.

பழனியில் அயல்பணி ஆய்வாளராக பணியாற்றி வந்த தூய மணி வெள்ளைச்சாமி என்பவர் திண்டுக்கல் வட்ட காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளார். மேலும் அவர் , அலுவல் பணியை தாண்டி என்னிடம் பேசுங்கள் என வற்புறுத்தியதாக அந்த பெண் காவலர் தற்போது புகார் அளித்துள்ளார். இந்த விசயம் தொடர்பாக சக காவலர்களிடம் கூறியபோது அவர் அப்படித்தான் எனவே அதை விட்டுவிடுங்கள் என்பதாக கூறியுள்ளனர்.

சமீபத்தில் காவல்துறையில் பெண் காவலர்களுக்கு இதுபோன்ற பாலியல் தொந்தரவுகள் நடந்து வருகிறது. இதனால் பெண் காவலர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த விசயத்தில் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள தமிழக முதல்வர் உரிய கவனம் செலுத்த வேண்டும். வேலியே பயிரை மேய்கிறது. அதனை இப்போதே அடியோடு அழிக்க வேண்டும்.
பெண் காவலர் தமிழ்ச்செல்வி தற்போது இந்த பிரச்சனை தொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். விரைவில் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பும்.