April 19, 2025
அமெரிக்காவில் பகவத்கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்ட காஷ் படேல் இந்தியா மக்கள் பெருமிதம்.

அமெரிக்காவில் பகவத்கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்ட காஷ் படேல் இந்தியா மக்கள் பெருமிதம்.

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார்.காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை நேற்று உறுதிசெய்தது. அதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை மீது சத்தியம் செய்தபடி காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குனராக பதவியேற்றுக் கொண்டார்.

அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய காஷ் படேல், நான் அமெரிக்கக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அமெரிக்க கனவு இறந்துவிட்டதாக நினைக்கும் எவரும், இங்கே பாருங்கள்.

உலகின் மிகப் பெரிய தேசத்தின் சட்ட அமலாக்க முகமைக்கு தலைமை தாங்கவிருக்கும் முதல் தலைமுறை இந்தியருடன் நீங்கள் பேசுகிறீர்கள். அது வேறெங்கும் நடக்காது. எப்.பி.ஐ-க்குள்ளும் அதற்கு வெளியேயும் பொறுப்பு இருக்கும் என உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

இவ்வாறு அளித்த பேட்டியின் மூலம் பகவத் கீதை மூலம் சத்தியம் செய்து இந்துக்களின் உடைய நம்பிக்கையையும் உலகுக்கு நிலைநிறுத்தியதையும் பாராட்டி இந்திய மக்கள் காஷ் படேல் செயலை நினைத்து பெருமிதம் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.