April 16, 2025
உங்களை தேடி உங்கள் ஊரில் ஆட்சியர்!

உங்களை தேடி உங்கள் ஊரில் ஆட்சியர்!

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், , சிங்கம்புணரி வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, தகுதியுடைய 67 பயனாளிகளுக்கு ரூ. 14.00 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், சிங்கம்புணரி வட்ட அளவில் பல்வேறு பகுதிகளில்,
அரசின் திட்டங்கள் தொடர்பான கள ஆய்வுகள் மேற்கொண்டு, பொதுமக்களை நேரில் சந்தித்து, கோரிக்கை மனுக்களைப் பெற்று, கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, தகுதியுடைய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் , பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு, எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் அறிவித்து அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணுகின்ற அரசு இயந்திரம் களத்திற்கு வரும் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் படி, தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வுகளில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவது உறுதி செய்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் , அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அதனடிப்படையில், சிவகங்கை மாவட்டத்தில் மாதந்தோறும் வட்ட அளவிலான முகாம்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி, இம்மாதத்திற்கு இன்றைய தினம் சிங்கம்புணரி வட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பல்வேறு திட்ட செயல்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பாக,  முதன்மை அலுவலர்களும் தங்களது துறை ரீதியாக வட்டளவில் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகள் மேற்கொண்டும்,
பொதுமக்களின் கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள் பெற்றும், உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும்,  சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட தனியார் மஹாலில் நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியின் வாயிலாகவும்,  பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களும் பெறப்படவுள்ளது. முன்னதாக, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய பயன்களை வழங்கிடும் பொருட்டு, நலத்திட்ட உதவிகளும் பயனாளிகளுக்கு இந்நிகழ்ச்சியின் வாயிலாக வழங்கப்படவுள்ளது.

இதனை தொடர்ந்து, சிங்கம்புணரி அரசு மருத்துவமனை மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை ஆகிய துறைகளின் சார்பில் செயல்பட்டு வரும் மாணவ மாணவியர் விடுதிகள் ஆகியவைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. 

இதேபோன்று, நாளைய தினமும் காலையில், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் பால் கொள்முதல் குறித்தும், சிங்கம்புணரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றும் பொருட்டு, பெறப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பாக, தகுதியுடைய பயனாளிகளுக்கு உரிய பயன்கள் உடனடியாக வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதுபோன்று, பிரதி மாதம்தோறும் மாவட்டத்தில் ஒரு வட்ட அளவில் நடைபெறவிருக்கும், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், இன்றைய தினம் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கண்ணமங்கலப்படி ஊராட்சி, காப்பாரப்பட்டி நடுநிலைப் பள்ளியில், குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 17.30 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆய்வுக் கூட கட்டிடத்தின் கட்டுமான பணிகள் மற்றும் இப்பள்ளிக்கென ரூ.34.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கூடுதல் கட்டிடங்களின் கட்டுமான பணிகள், அப்பள்ளியில் குழந்தைகளின் கற்றல் திறன், சமையலறை கூடம், அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் ஆகியன குறித்தும், உணவினை சுவைத்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோன்று, கண்ணமங்கலப்பட்டி கிராமத்தில், நியாய விலைக் கடை மற்றும் அணைக்கரைப்பட்டி கிராமத்து நியாய வலைக் கடை ஆகியவைகளில் பொதுமக்களுக்கு
வழங்கப்படும் குடிமைப் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும், கண்ணமங்கலப்பட்டி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-2023-ன் கீழ் செயல்பட்டு வரும் நூலக செயல்பாடுகள், புத்தகங்களின் இருப்பு மற்றும் தேவையான புத்தக வகைகள் ஆகியன குறித்தும், அதனைத் தொடர்ந்து, கண்ணமங்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும், மகளிர் சுய உதவி குழுக்களின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பயன்பாடுகள் ஆகியன குறித்து மகளிர் சுய உதவி குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர், கலந்துரையாடினார்.

மேலும், கண்ணமங்கலப்பட்டி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.56 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் மற்றும் இவ்ஊராட்சிக்கென ரூ.17.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட்டு வரும் ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கட்டுமான பணிகள் குறித்தும், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் சார்பில் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்த மானிய திட்டத்தின் கீழ் (PMFME Scheme) மாட்டு தீவனம் அரவை இயந்திரம் அமைப்பதற்கென  ரூ.1.25 இலட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் கடனுதவி பெற்று, பயன்பெற்று வரும் பயனாளியிடம் திட்ட பயன்கள் குறித்தும் மற்றும் கிருங்காக்கோட்டை பகுதியில் கேக் தயாரிக்கும் பேக்கரி நிறுவனம் அமைப்பதற்கென ரூ. 5.00 இலட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் கடனுதவி பெற்று, பயன்பெற்று வரும் பயனாளியிடம் திட்ட பயன்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

அதேபோன்று, அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20.87 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகள் தொடர்பாகவும் மற்றும் வேட்டையன்பட்டி நடுநிலைப்பள்ளியில் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் மற்றும் அப்பள்ளியில் 3.92 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுச்சுவர் அமைத்தல் பணி, 5.80 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் கழிப்பறைகள், 2.80 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட வரும் மினி கழிப்பறைகள் ஆகியவைகளில் கட்டுமான பணிகள் தொடர்பாகவும், ரூ.60,000/- மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வகுப்பறை மராமத்து பணிகள் குறித்தும், அதனைத் தொடர்ந்து, அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ. 3.00 இலட்சம் மதிப்பீட்டில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வரும் இல்ல கட்டுமான பணிகள் குறித்தும், கிருங்காக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வேளாண்மை துறையின் சார்பில் பயன்பெற்று வரும் விவசாயிடம், அவர் மேற்கொண்டு வரும் இயற்கை விவசாயம் குறித்தும், அவரது விளை நிலத்தில் சப்போட்டா, மா, பலா, அன்னாசி உள்ளிட்ட பல வகைகள் மற்றும் தேக்கு, வேங்கை கிளார்சீடியா போன்ற மர வகைகள் ஆகியன பயிரிட்டு, மானியத்துடன் கூடிய திட்டத்தின் கீழ் அவர் பெற்றுவரும் பயன்கள் குறித்து பார்வையிட்டு, பயன்கள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.

சிங்கம்புணரி பகுதியில் R.75 திருப்பத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ள முதல்வர் மருந்தகம் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிகழ்வின் போது, சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட சிங்கம்புணரி வட்டம், சேவுகமூர்த்தி அய்யனார் கோவில் அருகில் அமைந்துள்ள செல்வி திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியின் வாயிலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் 17 பயனாளிகளுக்கு ரூ. 4.25 இலட்சம் மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ஆதி திராவிடர் இ-பட்டாக்களுக்கான ஆணைகள், 06 பயனாளிகளுக்கு ரூ.1.32/- மதிப்பீட்டிலான இறப்பு நிவாரணத் தொகைக்கான ஆணைகள்,
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் சார்பில் மொத்தம் 15 கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.30,000/- மதிப்பீட்டில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் மருந்து பெட்டகங்கள், தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு‌ மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் மாடித்தோட்ட தொகுப்பு மற்றும் கலைஞரின் ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.6,450/- மதிப்பீட்டில் தென்னை பரப்பிற்கான ஆணைகள் மற்றும் வேளாண்மை துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு மினி கிட் உளுந்து மற்றும் திரவ உயிர் உரங்கள், சூடோமோனஸ் என இடுபொருட்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 02 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.08 இலட்சம் மதிப்பீட்டில் மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் கூட்டுறவுத் துறையின் சார்பில் சிங்கம்புணரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ. 4.79 இலட்சம் மதிப்பீட்டிலான தென்னை பராமரிப்பு கடனுதவிகான ஆணைகள் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 12 மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு ரூ. 12.50 இலட்சம் மதிப்பீட்டிலான‌ கடனுதவிகள் என ஆக மொத்தம் 67 பயனாளிகளுக்கு ரூ.14.00 இலட்சம்  மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.எஸ்.செல்வசுரபி , தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கா.வானதி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், சிங்கம்புணரி வட்டாட்சியர் பரிமளம் மற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.