
பழனி சுற்றுவட்டாரத்தில் சிசிடிவி கேமராவால் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் குறைந்து வருகின்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அதை சுற்றியுள்ள வட்டாரங்களில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. முக்கியமான இடங்கள் பேருந்து நிலையம். வணிக வளாகங்கள் மருத்துவமனைகள் செல்லும் பாதைகள் கல்லூரி பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இதனால் குற்ற சம்பவத்தில் ஈடுபடும் நபர்களை பழனி காவல் நிலையத்திலிருந்து சிசிடிவி கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து குற்றம் உறுதியானால் வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன அதனால் குற்ற சம்பவங்கள் ஈடுபடும் நபர்கள் குறைந்து வருகின்றனர்.
பழனி காவல் துணை கண்காணிப்பாளர் தனஜெயன் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட பின்னர் தற்பொழுது குற்ற சம்பவங்கள் குறைந்து வருகின்றன குற்றவாளிகள் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதால் குற்றத்தில் ஈடுபடுவதை குறைத்துள்ளனர்.
பொதுமக்களுக்கு அச்சுறுத்த வகையில் பொது இடங்களில் பைக் ரேஸர்களின் அட்டகாசம் குறைந்துள்ளது. பள்ளி கல்லூரி வளாகத்தின் வெளியே சந்தேகப் படி நிற்கும் நபர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்து அனுப்பப்படுகின்றன.
பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கட்சி பிரமுகர்களும் பல முயற்சிகள் எடுத்து சிசிடிவி கேமரா பொருத்தப்படுவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த காவல்துறைக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.