
வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவில் பணியாளர்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா
தேனி மாவட்டம் வீரபாண்டியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு கட்டுப்பட்ட வீரபாண்டி அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோவிலில் பணியாற்றி வரும் திருக்கோவில் பணியாளர்களுக்கு ரூபாய் 2.30 கோடி மதிப்பீட்டில் பி டைப் மற்றும் சி டைப் குடியிருப்புகள் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வீரபாண்டி பகுதியில் நடைபெற்ற விழாவில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ் செல்வன், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் .சரவணக்குமார் முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித்சிங் புதிய கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் வீரபாண்டி ஒன்றிய செயலாளர் ரத்தினசபாபதி, வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் ராஜசேகர், இந்து சமய அறநிலையத் துறையினர், அரசு அலுவலர்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.