July 30, 2025
திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயனிகள்.

திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் இல்லாமல் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயனிகள்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பத்து ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயனிகள் தவித்து வருகின்றனர்.

தென்மாவட்டங்களுக்கு செல்ல திருமங்கலம் மையபகுதியாக இருப்பதால் பேருந்துகள் மற்றும் இரயில் போக்குவரத்து இருந்து வருகிறது.இதற்கிடையே தமிழக முதல்வர் சட்டமன்ற அறிக்கையில் தமிழ்நாட்டில் 13பேருந்து நிலையங்கள் 13இடங்களில் இல்லாத ஊர்களில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.

10.86 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரிகள் ஆய்வும் செய்தனர்.இதுவரை திருமங்கலம் மற்றும் வெளியூர்களில் பேருந்து நிலையம் அமைக்கப்படவில்லை.

இதற்கிடையில் ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன.இதனால் மாற்று பாதைகள் இல்லாமல் தினமும் பொதுமக்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு தவித்து வருகின்றனர்.விரைவில் திருமங்கலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *