
மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்,
இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மை பாரத் நேரு யுகேந்திரா மற்றும் முள்ளி பள்ளம் ஜே பி மகளிர் மன்றம் சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இந்த போட்டியினை, உதவி தலைமை ஆசிரியர் விஜயரங்கன் தலைமை தாங்கி துவக்கிவைத்தார்.
அன்னை அகாடமி சேர்மன் ஆண்டி முன்னிலை வகித்தார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், கேடயம்,கோப்பை, மெடல் உள்ளிட்ட பரிசுகளை அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர் முரளிதரன், வழக்கறிஞர்கள் முத்துமணிமூர்த்தி, தங்கபாண்டி ஆகியோர் வழங்கினார்.
இதில், மாணவ மாணவியர்களுக்கு வாலிபால், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், சிலம்பம், கயிறு இழுத்தல், 100 மீட்டர் ஓட்ட பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ் விளையாட்டு போட்டிகளின் நடுவராக இருந்தார். முடிவில் ரோஜா மகளிர் மன்ற நிர்வாகி சந்தியா நன்றி கூறினார்.






