
உலக புற்றுநோய் தினத்தையொட்டி பள்ளி மாணவ மாணவிகள் நாடகம் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளி சார்பில் உலக புற்றுநோய் தினத்தையொட்டி பள்ளி மாணவ மாணவிகள் 15 கிலோமீட்டர் சைக்கிளில் பேரணியில் பதாகைகளை ஏந்தி பயணம் செய்து நாடகம் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்; விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தாராபுரம் காவல் சார்பு ஆய்வாளர் சையது இப்ராஹிம் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஞான பண்டிதன் முன்னிலை வகித்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புற்று நோயை கண்டு மக்கள் அஞ்சப்பட வேண்டாம் என்றும், ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த முடியும் என்றார்.
பொதுமக்கள் மத்தியில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார் சுமார் 100-க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் தங்களின் சைக்கிள்களில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை தாங்கி 15- கிலோ மீட்டர் அளவிலான பேரணியினை பள்ளியிலிருந்து தொடங்கி ரெட்டார வலசு ரோடு, உப்புத்துறை பாளையம், ஐந்து முக்கு, சர்ச் சாலை, பூக்கடை முக்கு பொள்ளாச்சி ரவுண்டானா, தாராபுரம் பேருந்து நிலையம் வந்தடைந்தனர்.
பிறகு பேருந்துக்காக காத்திருந்த பொது மக்களிடம், நாடகம், நடனம், விழிப்புணர்வு பேச்சு மற்றும் மைம் போன்ற செயற்பாடுகள் மூலம் தாராபுரம் மக்களிடத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வினை மேற்கொண்டனர்.
பின்னர் சென்ற வழியாகவே மீண்டும் திரும்பி மக்களிடத்து விழிப்புணர்வை மேற்கொண்டு பள்ளி வந்தடைந்தனர். அகரம் பள்ளி மாணவர்களின் மிதிவண்டி பயணம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.