
புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு
திருநெல்வேலி மாவட்டத்தின் எட்டாவது புத்தகத் திருவிழா திருநெல்வேலி அரசு வர்த்தக மையத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
சுமார் 120க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், பழங்கால பொருட்கள் கண்காட்சி, அறிவியல் தொழில்நுட்ப கண்காட்சி, செயற்கை நுண்ணறிவு கண்காட்சி மற்றும் கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
புத்தகத் திருவிழாவில் பொதுமக்களுடைய பங்களிப்பை அதிகப்படுத்துவதற்காக கிராமங்கள் தோறும் வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக முன்னாள் நல் நூலகர் திரு முத்துகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் உள்ள குழுவினர் சுத்தமல்லி, திருப்பணி கரிசல்குளம் போன்ற கிராமப்புற பகுதிகளில் புத்தகக் கண்காட்சி குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர்.
இதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியில் உள்ள ஓவிய ஆசிரியர்கள் மாரியப்பன், அங்குராஜ் முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுசாமி மற்றும் முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. நெல்லை டேவிட் மற்றும் மாணவர்களுக்கு புத்தக திருவிழா நடைபெறும் நோட்டீஸ்களை வழங்கினர்.