April 17, 2026
பழனியில் ஏ ஐ சி சி டி யு தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

பழனியில் ஏ ஐ சி சி டி யு தொழிலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல சங்கம் ஏ ஐ சி சி டி யு உடைய திண்டுக்கல் மாவட்ட பேரவை கூட்டம் இன்று பழனியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். உடல் உழைப்பு சங்கத்தின் கொள்கைகள் விளக்கம் சம்பந்தமாகவும், தொழிலாளர்கள் பிரச்சனை குறித்தும் சிபிஐஎம்எல் கட்சியின் மாநில செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி துவக்க உரையாற்றினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இயக்கத்தின் மூன்று நீரோட்டங்கள் என்கின்ற தலைப்பில் மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர்.சந்திரமோகன் கருத்துக்களை பகிர்ந்தார். இறுதியாக ஏ ஐ சி சி டி யு உடைய அகில இந்திய தலைவர் வீ.சங்கர் சிறப்புரையாற்றினார்.

நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது, தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் , ஊதியம் போன்றவை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறிய அவர், தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லாத பட்ஜெட்டாகவும் , முதலாளி வர்க்கத்தின் ஆதரவான பட்ஜெட்டாகவும் இருப்பதாக கூறினார்.

இக்கூட்டத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவாக உடல் உழைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் மீனாட்சிசுந்தரம் நன்றி உரையாற்றினார்.

நடைபெற்ற கூட்டத்தின் தொழிலாளர்கள் நலனிற்காக தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

தீர்மானங்கள்.
1,பழனி தேவஸ்தான அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலின் தானமான நிலங்களை, ஆக்கிரமிப்பு ஆலரர்களிடமிருந்து மீட்டெடுத்து, போகர் சித்த மருத்துவக் கல்லூரியை அமைத்திடுக……

2.திரு அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவிலில்,முடி காணிக்கை செலுத்தும், முடிகளை சேமிப்புக் கிடங்கு உருவாக்கி, அரசே, நிர்வைக்கும் வித்து தொழிற்சாலை அமைத்திடுக……

3.பழனி ஒன்றியத்தில், வீட்டுமனை அற்ற மக்களுக்கு, இலவச வீட்டு மனை இடமும், அதற்கு பட்டாவும் வழங்கிடுக….. கனிமவள சுரண்டலை தடுத்து நிறுத்திடுக…

4.திண்டுக்கல் மாவட்டத்தில் குறிப்பாகஒட்டன்சத்திரம் மற்றும்,பழனி பகுதிகளில் இயங்கும் டாஸ்மார்க் டாஸ்மாக் கடைகளில் அமைக்கப்பட்டுள்ள… அரசு விதிமுறைகளுக்கு எதிராக, 24 மணி நேரம் செயல்படும் பார்களை…. உடனடியாக நிறுத்தம் செய்ய வேண்டும்… அப்பாவை பொதுமக்களை பாதுகாத்திடுக,

போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *