July 28, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், கன்னிராஜபுரம் இராமையா நாடார் குடியிருப்பில் அமைந்துள்ள அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் திருக்குட முழுக்கு நன்னீராட்டு பெருவிழா தை மாதம் 20ஆம் தேதி 20 02 20 25 ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதியும் உத்திரட்டாதி நட்சத்திரமும் சிவயோகமும் கூடிய சுபதினத்தில் அன்று காலை 10 மணிக்கு மேல் 11 45க்குள் மேஷம் லக்னத்தில் சகல பரிவார தேவதா சகித ஸ்ரீ அருள்மிகு சுயம்புலிங்க சுவாமிக்கும் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கனராவர்த்தன ஜீரணம் தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கும்பகோணம் திப்பிராஜபுரத்தைச் சேர்ந்த வேத ஆகமத்திலகம் ஸ்ரீ சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ நாகராஜன் மற்றும் ராஜமுத்து அறக்கட்டளை, விழா கமிட்டியாளர்கள், பக்தர்கள் மற்றும் பொது மக்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

தை மாதம் தை மாதம் 18ஆம் தேதி 31. 01. 2025 வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மங்கள இசையுடன் திருமுறை பாராயணம் மற்றும் விக்னேஸ்வர பூஜை,தீபலட்சுமி பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிர நவக்கிரக ஹோமம், வேத பாராயணம்,மகாதீப தீபாரதனை உடன் தீர்த்தம் எடுத்து வரப்பட்டது.
பல்வேறு சிறப்பு பூஜைகளும் முதல் கால பூஜையுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.

அன்று மாலை 6:00 மணிக்கு மேல் நாட்டுப்புற பாடகி தேவகோட்டை அபிராமி மற்றும் திரைப்பட பின்னணி இசை பாடகர் வேல்முருகன் இவர்களுடன் இணைந்து ஹலோ ஈவண்ட்ஸ் வழங்கும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தை மாதம் 19 ஆம் தேதி 01. 02. 2025 சனிக்கிழமை திருமுறை பாராயணம், இரண்டாம் கால பூஜை மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனையுடன் வழங்கப்பட்டது.

அன்று மாலை 6:00 மணிக்கு மேல் விஜய் டிவி புகழ் MRK.ராதாகிருஷ்ணன் மற்றும் விஜய் டிவ புகழ், மருதமணி இவர்களுடன் இணைந்து ஹலோ ஈவண்ட்ஸ் வழங்கும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

தை மாதம் 20ஆம் தேதி 02.02.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மங்கள இசை இடம் திருமுறை பாராயணம் நான்காம் சிறப்பு பூஜையுடன் கடம் புறப்பாடு,விமான அபிஷேகம் அருள்மிகு ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி, ஸ்ரீ பிரம்ம சக்தி அம்மன், மற்றும் வராகி அம்மன், ஸ்ரீ கஜலட்சுமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்கார பிரசன்ன பூஜை மகேஸ்வர பூஜையுடன் பக்தர்கள் அனைவரின் மீதும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி காட்சி தந்தார்.
தொடர்ந்து தீப ஆராதனையுடன் பிரசாதம் வழங்கப்பட்டது.

மாலை 3 மணிக்கு 504 சிவலிங்க பூஜை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு விஜய் டிவி புகழ் நாட்டுப்புறக் கலைஞர் அந்தோனிதாசன் மற்றும் விஜய் டிவி புகழ் கலக்கப்போவது யாரு ஆதவன் இவர்களுடன் இணைந்து ஹலோ ஈவண்ட்ஸ் வழங்கும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

31.01.2025 முதல் 02.02.2025 வரை மூன்று நாட்களும் தொடர்ச்சியாக சைவ அன்னதானம்  நடைபெற்றது. 

இதில் கோவிலுக்கு வருகை தந்த பக்த கோடிகளும் பொதுமக்களும் அனைவரும் சிறப்புற்றனர்.03.02. 2025 திங்கட்கிழமை பகல் 12 மணியளவில் திருமதி பிச்சை அம்மாளுக்கு சிறப்பு பூஜை மற்றும் மாபெரும் அசைவ அன்னதானம் நடைபெற்றது.

இத்தளத்தின் சிறப்பு. இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையில் அமைந்துள்ள சிவ ஸ்தலங்களில் முக்கிய ஸ்தலமாக இக்கோயில் விளங்குகிறது.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி மற்றும் தேவிபட்டணம் நவபாசனம், மாரியூர் பூவேந்தியநாதர் ஆலயம் இத்தலங்களைப் போல் கடற்கரையில் அமைந்துள்ள இச்சிவதலம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் அனைத்து நவகிரக சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்றத் தலமாக சிறந்து விளங்குகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ராஜமுத்து ஆசிரியர் அறக்கட்டளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.