June 8, 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் L. தர்மராஜுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் L. தர்மராஜுக்கு உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்.

தமிழக வெற்றி கழகத்தின் திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் தொகுதிகளை உள்ளடக்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளை நியமனம் செய்து தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள l .தர்மராஜ் இன்று திண்டுக்கல் காமராஜர் சிலை முன்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் பல்வேறு அணிகளை சார்ந்த நிர்வாகிகள் கிரேன் மூலம் மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து தொண்டரணி சார்பாக பெரியார் சிலை அருகே ஜே சி பி மூலம் மலர்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் தர்மாவுக்கு கும்ப மரியாதை செய்தனர்.பின்னர் பெரியார் சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள் தர்மராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.