July 25, 2025
சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை திட்டத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

சிவகங்கை:

தோட்டக்கலைத்துறையின் சார்பில், 2024-25ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.369.852 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்ட இனங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திட்ட செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டம், தோட்டக்கலைத் துறையின் சார்பில், 2024-25ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் கீழ் சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் திட்ட செயல்பாடுகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை ஆகிய துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி விவசாயிகளின் உற்ற தோழனாக திகழ்ந்து வருகிறார்கள்.

அதில், சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையின் சார்பில், 2024-25ம் ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் கீழ் ரூ.369.852 இலட்சம் மதிப்பீட்டில் பண்ணைக்குட்டை, நிழல்வலைக்கூடம், பசுமைக்குடில், சிப்பம் கட்டும் அறை, குறைந்த செலவில் வெங்காய சேமிப்பு கிடங்கு, நிரந்தர மண்புழு உரக்கூடம் போன்ற பல்வேறு திட்ட இனங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY) திட்டத்தின் கீழ் ரூ.400.00 இலட்சம் மதிப்பீட்டில், சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் சொட்டு நீர்பாசனம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேற்கண்ட திட்டங்கள் தொடர்பாக பயன்பெற்று வரும் விவசாயிகளின் திட்ட பயன்கள் குறித்து நேரடி களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றியத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலமாக தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிழல்வலைக்கூடத்தில் காய்கறி நாற்றுகளின் உற்பத்தியினையும், புழுதிப்பட்டி கிராமத்தில் ரூ.3,60,000/- மதிப்பீட்டில் மானியத்துடன் பயனாளிக்கு வழங்கப்பட்ட 600 சதுர மீட்டர் நிழல்வலைக் கூடத்தினையும், ரூ.9,50,000/- மதிப்பீட்டில் மானியத்துடன் பயனாளிக்கு வழங்கப்பட்ட 1000 சதுர மீட்டர் பரப்பளவில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள பசுமைக்குடில் அமைப்பு ஆகியவைகள் குறித்தும் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு, அதேபோன்று, இடையப்பட்டி கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் ராஷ்ட்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள சொட்டு நீர்ப் பாசன வசதி, தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டதின் கீழ் புதிய பரப்பு விரிவாக்கம் இனத்தின் கீழ் வழங்கப்பட்ட மா-அடர் நடவினை கொண்டு மேற்கொள்ளப்பட்ட விவசாயம் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், இடையப்பட்டி கிராமத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்திட்டத்தின் கீழ் புதிய பரப்பு விரிவாக்க திட்டத்தின் கீழ் பப்பாளி பயிரில் மிளகாய் ஊடுபயிர் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைப்பது தொடர்பாகவும், நிலப்போர்வை அமைத்து செலவினங்களை குறைப்பதற்கான ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, எஸ்.புதூர் வட்டாரத்திலுள்ள தோட்டக்கலைப் பயிர்களின் மொத்த சாகுபடி பரப்பினையும், குறிப்பாக பச்சை மிளகாய் -300 ஹெக்டர், பப்பாளி – 30 ஹெக்டர் மற்றும் மா-680 ஹெக்டர் சாகுபடி செய்திருப்பது, தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு திட்ட செயல்பாட்டிற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

இதுபோன்று, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில் எண்ணற்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டங்கள் குறித்து, விவசாயிகள் முழுமையாக அறிந்து கொண்டு, அத்திட்டங்களின் மூலம் பயன்பெற்று தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

இந்நிகழ்வுகளில், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் எஸ்.குருமணி, உதவி இயக்குநர் தர்மர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.