
திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஊழியர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் அஞ்சல் கோட்ட அதிகாரியின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும் அனைத்து அஞ்சல் ஊழியர் கூட்டு போராட்டக் குழுவின் சார்பாக தலைமை தபால் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுவெளி ஊழியர்களை ஒருமையில் திட்டுவதை கைவிட வேண்டும் பெண் ஊழியர்களை பணி நேரம் கடந்து இரவு 8 மணி வரை சட்ட விரோதமாக பணியாற்ற சொல்லும் போக்கை கைவிட வேண்டும் .ஐ.டி.சி என்ற பெயரில் அஞ்சல் துறையை சீர்குலைக்கும் நடவடிக்கை கைவிட வேண்டும் . சிசிடிவி கேமரா பதிவை வைத்து மிரட்டும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அழகர்சாமி மற்றும் திருமலைசாமி ஆகியோர் தலைமை வகித்தனர் நாராயணன் முன்னிலை வகித்தார் முன்னாள் கோட்டை தலைவர் கணேசன் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர் இதில் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் தேசிய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் பாரதிய தபால் ஊழியர் சம்மேளனம் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.
தலைமை நிருபர் : பாலசிந்தன்.