
சிறு வியாபாரிகளின் உரிமைகள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
ஜனவரி 28 திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் லேக் ரோடு சிறுவியாபாரிகளின் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்ற சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா லேக் ரோட்டில் சிறு வியாபாரி சங்கத் தலைவர் சேவியர் தலைமையில் நடைபெற்றது.
விழாவின் சிறப்பு ஏற்பாடுகளை செயலாளர் காஜா மைதீன் பொருளாளர் காளிதாஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் இதில் சிறப்பு விருந்தினராக நகர் மன்ற தலைவர் செல்லத்துரை மற்றும் அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் சிறு வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.






