March 3, 2026
மதுரை அருகே, பசுமலை மேல் நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

மதுரை அருகே, பசுமலை மேல் நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

மதுரை அருகே, பசுமலை மேல் நிலைப் பள்ளியில் தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா அறிவுரையின் படி, பள்ளி தலைமையாசிரியை மேரி, தலைமையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.

தெற்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிகள் பற்றியும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. பள்ளி உதவி தலைமையாசிரியர் ரிச்சர்ட் பி ராஜன் வரவேற்புரை வழங்கினார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் உதவி ஆய்வாளர் செல்வகுமார் அறிவுரை வழங்கினார்.

சாலை பாதுகாப்பு மன்றச் செயலாளர் தி.மோசஸ்ராஜன். நன்றியுரை கூறினார்.
நுகர்வோர் மன்றச் செயலாளர் பிரகாஷ், மற்றும் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பாளர் ராபின் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *