
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் வளாக தேர்வு மூலம் 153 மாணவர்கள் தேர்வு.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 27.01.2025 அன்று ஒசுரில் உள்ள பிரபல பன்னாட்டு நிறுவனமான அசோக் லேலாண்ட் லிமிடெட் மற்றும் கல்லுாரியின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பாக 2025 ல் டிப்ளேமா முடிக்க இருக்கும் இயந்திரவில் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவர்களுக்கு வேலை அளிக்கும் விதத்தில் வளாக நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
முன்னதாக நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாம் துவக்க விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் திரு.அ.சேக்தாவுது அவர்கள் தலைமையுரையாற்றி பேசுகையில் கடந்த 10 வருடமாக 100% வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாகவும் இதுவரை 15,000 மேற்பட்ட மாணவர்கள் பல பன்னாட்டு நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளதாவும் கூறினார்கள்
கல்லுாரியின் துணை முதல்வர், இயந்திரவியல் துறைத்தலைவர் மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி முனைவர். ஜெ.கணேஷ்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்க மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் திரு.பொ.பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்
இந்த நேர்முகத் தேர்வில் ஒசுரில் அசோக் லேலாண்ட் லிமிடெட் நிறுவனத்துடன் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி செய்த புரிந்துணர்வு ஒப்பந்தப்படி அசோக் லேலாண்ட் லிமிடெட் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் திரு.சங்கர் அவர்கள் வளாக நேர்முகத் தேர்வினை நடத்தினார்கள். இந்த நேர்முகத் தேர்வில் சுமார் 182 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 2025 ல் டிப்ளேமா முடிக்க இருக்கும் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களிலுள்ள பாலிடெக்னிக் கல்லுாரிகளிலிருந்து இயந்திரவில்துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல்துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறையிலிருந்து மொத்தம் 153. மாணவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாதம் ரூபாய்.16,300/- ஊதியத்துடன் தங்க இடம், உணவு, சீருடை, பேருந்து போன்ற வசதிகள் செய்து தரப்படும் என்று நிறுவனத்தின் துணை பொது மேலாளர் திரு.சங்கர் அவர்கள் தெரிவித்தார்.
நிறைவாக இந்நிகழ்ச்சியில் இயந்திரவியல் துறை ஆசிரியர் முனைவர்.தே.சோமசுந்திரம் நன்றி கூறினார்.