
அழிந்த வரலாறு.
எங்கள் ஊரில் இப்படி ஒரு கடை இருந்தது. அந்த கடையில் என்ன விசேஷம் என்னவென்றால் மோர் தான். அவங்க பசு வளர்த்ததால் , அவங்க வீட்டு மோர் தான் பயன்படுத்துவார்.
படத்தில் காண்பது போல் தான் மண் பானையில் , வைத்து இருப்பார். மோர் கேட்டவுடன் ஒரு பெரிய கண்ணாடி கப்பில், லேசா , இடித்து வைத்த பச்சைமிளகு சம்பந்தியும், லேசா உப்பும் , ஒரு பாக்கெட் எலுமிச்சை ஊறுகாய் போட்டு மோருடன் கலக்கி கலக்கு தருவார் பாருங்க. சுவை அள்ளும். அவர் தருகிற பெரிய கண்ணாடி கப்பில் ஒரு கிளாஸ் குடித்தாலே போதும் வயிறும் , மனசும் நிறைந்து விடும். இன்னும் நினைத்து பார்த்தால் நாக்கில் எச்சில் ஊறும். அந்தளவுக்கு அருமையா இருக்கும். அந்த காலத்தில் 2 ருபாய் தான் வாங்குவார். அப்பொழுது சர்பத்யும் 2 ரூபாய் தான். உங்களின் ஊரிலும் இதே மாதிரி , ஒரு கடை இருக்கும்.








