March 3, 2026
புனித மரியன்னை பள்ளியின் 175 ஆண்டின் தொடக்க விழா

புனித மரியன்னை பள்ளியின் 175 ஆண்டின் தொடக்க விழா

திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளி வளாகம், கல்வி பணியில் 175-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்ததனை முன்னிட்டு, 175-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் தொடக்க விழா இன்று 25.01.2025 சனிக்கிழமை காலை 9.45 மணியளவில் திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் P.தாமஸ் பால்சாமி ஆண்டகை தலைமையில், இயேசு சபை மதுரை மறைமாநிலத் தலைவர் அருள்முனைவர். தாமஸ் அமிர்தம், திண்டுக்கல் மறைமாவட்ட முதன்மைக் குரு பேரருள்திரு.T. சகாயராஜ், புனித மரியன்னை பள்ளிகளின் அதிபர் அருள்பணி.R. மரிவளன், தாளாளர் அருள்பணி.S. மரியநாதன், பல்வேறு அருள்தந்தையர்கள் இணைந்து நன்றித் திருப்பலி நிறைவேற்றினர்.

அதனைத் தொடர்ந்து 175-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. மதுரை மறைமாநில இயேசு சபைத் தலைவர் அருள்முனைவர். தாமஸ் அமிர்தம். தலைமையேற்க, பள்ளியின் பெருமைமிகு முன்னாள் மாணவர் K.அலாவுதீன், I.A.S. (ஓய்வு) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ். துணை மேயர் S.ராஜப்பா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் P.உஷா, மாவட்டக் கல்வி அலுவலர் N. நாகேந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் K.வெற்றிச்செல்வி, வட்டாரக் கல்வி அலுவலர் P. விஜயா ஆகியோர் பங்கேற்றனர். முன்னாள் மாணவர் கழக S.K.C. குப்புசாமி, அரசன் S. சண்முகம், M. பாலசுந்தர், முன்னாள் மாணவர் கழகத் தலைவர் S.M. வீரமணி, திருவருட் பேரவை பொருளாளர் N.M.B. காஜாமைதீன், ஓய்வுபெற்ற ஆசிரியர்-அலுவலர் சங்கச் செயலர் P. இராஜரத்தினம் ஆகியோர் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். தலைமையாசிரியர் அருள்பணி.M.. ஆரோக்கியதாஸ், நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை உதவித் தலைமையாசிரியர்கள் அருள்பணி.A. ஞானராஜ், அருள்பணி.P. ஜோசப் சேவியர், S.மரியலூயிஸ் சேகர், S.பெரர் நோயல் ராஜ், A. ஜான் டேவிட் ஆசிரியர்-அலுவலர் சங்கச் செயலர் S.பிரிட்டோ அமல்ராஜ், A.ஆரோக்கிய லாரான்ஸ் குழந்தைராஜ், X.மரிய ராஜேந்திரன், G.மைக்கில் ஜோசப் ராஜ் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தினர்.

தலைமை நிருபர் : பாலசிந்தன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *