
நலத்திட்டம்.
மணவெளி சட்டமன்றத் தொகுதி பூரணாங்குப்பம் ராஜீவ் காந்தி நகரில் உள்ள அனைத்து தெருக்கள் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி அலுவலக தெரு ஆகியவற்றுக்கு ரூ 37.33 லட்சம் மதிப்பில் புதிய கருங்கல் சாலை, கழிவு நீர் வாய்க்கால் மற்றும் தார் சாலை அமைப்பதற்கான பணிகளுக்கு இன்று 24.01.2025 காலை நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம்.ஆர் அவர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.

அதன்படி பூரணாங்குப்பம் கிராமத்தில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் உள்ள அனைத்து தெருக்களையும் ரூ29.70 லட்சம் மதிப்பில் கருங்கல் சாலை அமைக்கும் பணி மற்றும் பூரணாங்குப்பம் கிராம நிர்வாக அதிகாரி அலுவலக வீதியில் ரூ.7.63 லட்சம் மதிப்பில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகளுக்காக அந்தந்த பகுதிகளில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக விவசாய அணி பொதுச் செயலாளர் சக்திபாலன் மாவட்டத் தலைவர் சுகுமார் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் சக்திவேல் ராஜீவ் காந்தி நகர் நல சங்க நிர்வாகிகள் ராஜசேகர் கலைவாணன் சுரேஷ்குமார் மற்றும் புருஷோத்தமன் முருகேசன் முருகானந்தம் பார்த்திபன் முத்துசாமி சண்முகம் பார்த்தசாரதி அசோகன் தனசேகர் மணி ராஜகுரு வேலு பாஸ்கர் தங்கம் முனியன் அய்யனார் ராஜதுரை நாகமுத்து குமரன் செல்வி சூரிய பிரகாஷ் ஆறுமுகம் அப்பு மற்றும் அந்தந்த பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.