March 3, 2026
திண்டுக்கல்லில் “வைகை இலக்கியத் திருவிழா-2025“ மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்லில் “வைகை இலக்கியத் திருவிழா-2025“ மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்ககம் சார்பில் “வைகை இலக்கியத் திருவிழா வை மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் முன்னிலையில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லுாரியில் தொடங்கி வைத்தார்.

விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நுாலக இயக்ககம் ஆகியவை சார்பில் வைகை இலக்கியத் திருவிழா-2025 திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லுாரியில் நடைபெறுகிறது.

வைகை இலக்கியத் திருவிழாவானது, பண்பாட்டரங்கம், வரலாற்றரங்கம் ஆகிய இரண்டு அரங்கங்களுடன் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளன. மேலும், புத்தகக் கண்காட்சி, பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளின் புகைப்படக் கண்காட்சி மற்றும் ஓவியக் கண்காட்சி, இலக்கிய சொற்பொழிவுகள், கலந்துரையாடல், கவிதை பொழிவு, புகழ்பெற்ற எழுத்தாளர்களின் கதை, கட்டுரை மற்றும் நுால் திறனாய்வு, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. மேலும் வினாடி வினா போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

வைகை நதி பாயும் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றவுள்ளனர்.

இலக்கியம் தான் ஒரு மனிதனை பண்படுத்தும். இளமைக்காலத்தில் இருந்தே மாணவ சமுதாயத்துக்கு தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் தீராத ஆர்வத்தை உருவாக்க வேண்டும்.

வைகை இலக்கியத் திருவிழா-2025 பொதுமக்களிடையை வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும், பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடைய இலக்கிய ஆர்வத்தை தூண்டவும் நடத்தப் பட்டு வருகிறது.

திண்டுக்கல் புத்தகத்திருவிழா தனித்துவம் வாய்ந்தது. இங்கு ஆண்டுதோறும் நடத்தப்படும் புத்தகத் திருவிழாக்களில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகங்களின் விற்பனை அதிகரித்துக்கொண்டே உள்ளது.

வைகை இலக்கியத் திருவிழாவிற்கு வருகை தரும் மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்விழா இப்பகுதிகளை சார்ந்த இலக்கியத்தை நேசிக்கின்ற மக்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது. இளைஞர்கள் இலக்கியத்துடன் உறவை மேம்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பை மாணவ, மாணவிகள், பொதுமக்களும் நல்ல முறையில் பயன்படுத்தி இலக்கியத்தில் தங்களுடைய ரசனைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இக்கூட்டத்தில், பொது நூலக இயக்ககம் இணை இயக்குநர் .ச.இளங்கோ சந்திரகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் சே.ஹா.சேக் முகையதீன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் இரா.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) .மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர்(நிலம்) செல்வம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.உஷா, துணை ஆட்சியர்(பயிற்சி) ராஜேஸ்வரிசுவி, மாவட்ட நூலக அலுவலர் .இரா.சரவணக்குமார், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *