May 12, 2025
புதுவை உப்பளம் தொகுதி மக்கள் நலப்பணிகள் குறித்து அனிபால் கென்னடி ஏம்எல்ஏ - நகராட்சி ஆணையர் கந்தசாமி ஆலோசனை.

புதுவை உப்பளம் தொகுதி மக்கள் நலப்பணிகள் குறித்து அனிபால் கென்னடி ஏம்எல்ஏ - நகராட்சி ஆணையர் கந்தசாமி ஆலோசனை.

புதுச்சேரி ஜன-18

புதுச்சேரி உப்பளம் தொகுதியில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலமும் தொகுதியில் நடைபெறாத  பணிகள் குறித்தும், நடக்க வேண்டிய பணிகள் குறித்தும் சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நகராட்சி ஆணையர் கந்தசாமி அவர்களிடம் ஆலோசனை நடத்தினார், 

அதில் குறிப்பாக சாலைகள் அமைக்க கோரி லதிப் சந்து, பாண்டியன் சந்து, அப்பாவுமேஸ்திரி வீதி, பொண்ணியாகுட்டி வீதி, வவுசி வீதி, மொராசன் வீதிகளை குறிப்பிட்டார், 

மேலும் நேதாஜி நகர் 3ல் உள்ள சமுதாய கூடத்தில் முதல் தளத்தில் பள்ளி கூடம், பிரான்சுவா தோப்பு மற்றும் ராசு உடையார் தோட்டம் கழிவறை, குபேர் மண்டபம் புரணமைப்பு, அரப்பணி அவ்வை தோட்டம் கல்யாண மண்டபம், ராசு உடையார் தோட்டத்தில் இரயில்வே நிலையம் வழியே செல்லும் வாய்க்கால் கட்டைகள் உப்பனாறு வரை அமைக்கும் பணி மற்றும் ஜெயராம் செட்டியார் தோட்டம், நேதாஜி நகர் அழகர் சாமி வீதி சாலை அமைக்க பூமி பூஜை ஆகிய பணிகள் குறித்து சட்ட மன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நகராட்சி ஆணையர் கந்தசாமி அவர்களிடம் ஆலோசனை நடத்தினார்,

 பின்னர் சட்ட மன்ற உறுப்பினர் ஆணையருக்கு சால்வை அணிவித்து பொங்கல் வாழ்த்துகள் கூறினார், உடன் கிளை செயலாளர் ராகேஷ் இருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.