March 3, 2026
திண்டுக்கல்லில் போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளி கீழே விழுந்து கால் எலும்பு முறிவு

திண்டுக்கல்லில் போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளி கீழே விழுந்து கால் எலும்பு முறிவு

திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியில் அகரமுத்து என்பவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த வழக்கில் அங்குசாமி, ஷியாம்(19) ஆகிய 2 பேரை தாடிக்கொம்பு போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் கொலை செய்வதற்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்ற போலீசார் அங்குசாமியை அழைத்து சென்ற போது, போலீசாரிடமிருந்து தப்பிச்செல்ல ஒட முயன்ற அங்குசாமி தவறி கீழே விழுந்ததில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *