
கந்தர்வக்கோட்டை கோட்டை அருகே ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த தினத்தை முன்னிட்டு வினாடி வினா போட்டி.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் அக்கச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவில் மன்றத்தின் சார்பில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த தினத்தை முன்னிட்டு வினாடி வினா போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் ஆறு ஏழு எட்டு வகுப்பு மாணவர்கள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இரு பிரிவாக போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.
இந்நிகழ்விற்கு பொறுப்பு தலைமை ஆசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார், இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க கந்தர்வகோட்டை ஒன்றிய செயலாளரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியர் ஸ்டீபன் பிறந்த தினம் குறித்து பேசினார். இந்நிகழ்வில் ஆசிரியர்கள் நிவின்,ஜெம்ம ராகினி ஹில்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.