March 3, 2026
மடத்துக்குளம் காவல்நிலையத்தில் கைதி தப்பி ஓட்டம்.!தேடுதல் வேட்டையில் போலீசார்.!

மடத்துக்குளம் காவல்நிலையத்தில் கைதி தப்பி ஓட்டம்.!தேடுதல் வேட்டையில் போலீசார்.!

மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் ( 23 ) இவர் நேற்று முன்தினம் மடத்துக்குளம் அடுத்துள்ள கேடிஎல் பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்த இரண்டு சக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக நேற்று மதியம் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக மடத்துக்குளம் காவல்நிலையம் அழைத்து வரும்போது காவல்நிலைய வளாகத்தில் போலீசாரை தள்ளிவிட்டு தப்பியோடி விட்டார். இதனையடுத்து தப்பியோடிய முருகானந்தம் என்பவரை பிடிக்க உடுமலை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வெற்றிவேந்தன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் தப்பித்து ஓடிய முருகானந்தம் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு மற்றும் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *