August 7, 2025
கன்னியாகுமரி மாவட்ட அதிரடிப்படை போலீசார் சோதனையில், கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த 5 வாகனங்கள் பறிமுதல்.... 9 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்ட அதிரடிப்படை போலீசார் சோதனையில், கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த 5 வாகனங்கள் பறிமுதல்.... 9 பேர் கைது.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். இரா. ஸ்டாலின் IPS உத்தரவின்படி கேரளா மாநில எல்லை பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அதிரடிப்படை போலீசார் நடத்திய தீவிர சோதனையில் கேரளாவில் இருந்து கழிவுகள் கொண்டு வந்த 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.மேலும் கனகராஜ் (55), தினேஷ் குமார் (29), அய்யப்பன் (33), விஜூ(29),தர்சன், சாகுல் ஹமீது(63) ஹரால்(30),சைனு(24) சைன்றோ(25) ஆகிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையானது வரும் நாட்களில் மேலும் தீவிர படுத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *