June 8, 2025
மணவெளி சட்டமன்ற தொகுதி இடையார்பாளையம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை.

மணவெளி சட்டமன்ற தொகுதி இடையார்பாளையம் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை.

மணவெளி சட்டமன்ற தொகுதி இடையார்பாளையம் மற்றும் டோல்கேட் பகுதியில் ரூ. 18.00 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுவை சட்டப்பேரவை தலைவருமான செல்வம் ஆர் அவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

இடையார்பாளையம் கிராமத்தில் பள்ளிக்கூட வீதியை ரூபாய் 08.00 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி இடையார்பாளையம் மல்லிகாம்பாள் நகர் பகுதியில் ரூபாய் 05.00 லட்சம் மதிப்பில் மண் சாலை அமைக்கும் பணி அதனைத் தொடர்ந்து மணவெளி டோல்கேட் கிராமத்தில் உள்ள மங்கள் அவன்யூ பகுதியில் ரூபாய் 05.00 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகள் என மொத்தம் ரூபாய் 18.00 லட்சம் மதிப்பிலான பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவருமான த செல்வம் அவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு ரமேஷ் உதவி பொறியாளர் திரு நாகராஜ் இளநிலை பொறியாளர்கள் திருமதி சரஸ்வதி திரு சுரேஷ் மாவட்ட தலைவர் சுகுமாரன் மாவட்டத் துணைத் தலைவர் மணிகண்டன் இடையார்பாளையம் பகுதி ஆதிமூலம் நாகராஜ் சிவபாலன் ராஜாராமன் சீனிவாசன் ராம்குமார் குணாநிதி விஜயகுமார் டோல்கேட் பகுதி எஸ் வி எஸ் குமரன் என் எஸ் கே செழியன் கலைவாணன் வேலாயுதம் பிரியா மூர்த்தி சக்திவேல் சேகர் உஷா பிரபாகரன் பாலகுரு ராமலிங்கம் நந்தகோபால் சதீஷ் மற்றும் அந்தந்த பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.