August 7, 2025
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள வலையங்குளம் மயானத்தில் வாலிபர் தலையில் கல்லால் தாக்கி கொலை.

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள வலையங்குளம் மயானத்தில் வாலிபர் தலையில் கல்லால் தாக்கி கொலை.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையன் குளம் கிராமத்தை சேர்ந்தவர் மணியரசு இவரது மனைவி தனலட்சுமி இவர்களுக்கு வேல்முருகன் (வயது 26 ) .தேவி (வயது 24) என பிள்ளைகள் உள்ளனர்.

வேல்முருகன் நிமிந்தால் (கொத்தனர் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு எட்டு மணி அளவில் வீட்டில் உணவருந்தி விட்டு வேல்முருகன் வெளியே சென்றுள்ளார்.

பின்பு வீட்டுக்கு வரவில்லை அதிகாலை 6 மணியளவில் வேல்முருகன் மயானத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து, மணியரசு மற்றும் உறவினர்கள் வலையன் குளம் மயானத்தில் சென்று பார்த்த போது அங்கே வேல்முருகன் தலையில் கல்லால் நசுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதனை அடுத்து, பெருங்குடி போலீசாருக்கு தகவல் அளித்தனர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

வேல்முருகன் இறந்து இடத்தின் அருகே ஆறு காலி மது பாட்டில்கள் கிடந்துள்ளது.
நண்பர்களுடன் மது அருந்திவிட்டு பின்னர் ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டாரா எனவும் , வேறு ஏதேனும் முன் விரோதங்கள் காரணமாக உள்ளனவா என, பெருங்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இறந்த வேல் முருகனின் உடலை கைப்பற்றி உடற் கூரு பரிசோதனை ஆய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *