
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து இல்லங்களுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான தினசரி நாள்காட்டி மற்றும் சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி, உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து இல்லங்களுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான தினசரி நாள்காட்டி மற்றும் சர்க்கரை வழங்கும் நிகழ்ச்சியை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாநில துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி அவர்கள் தொடர்ச்சியாக உப்பளம் தொகுதி பகுதியில் உள்ள திப்புராயபேட்டை மற்றும் வம்பாகீரபாளையம் பகுதிகளில் தொடங்கி வைத்தார்.

உப்பளம் தொகுதியில் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வசிப்பவர்கள் அனைவருக்கும் தினசரி நாள்காட்டி மற்றும் சர்க்கரை இன்னும் 3 தினங்களுக்குள் தொகுதி முழுவது கொண்டு சேர்க்கப்படும் என்று கூறினார் தொகுதி மக்களை சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் பொங்கல் வாழ்த்துகள் கூறி வருகிறார்,
தொகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் சட்ட மன்ற உறுப்பினரை வரவேற்று வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ஹரிகிருஷ்ணன், மாநில கழக நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், கழக சகோதரர்கள், எம் எல் ஏ ஆதரவாளர்கள் யாவரும் உடன் இருந்தனர்.