
பட்டியலியன மக்கள் மீதான தாக்குதலை எதிர்த்து இலவச தோல்நோய் மருத்துவ முகாம்.
புதுக்கோட்டை,ஜன.3-பட்டியலியன மக்கள் மீதான தொடர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலவச தோல்நோய் மருத்துவ முகாம் புதுக்கோட்டை அறிவியல் இயக்க மாவட்ட வளாகத்தில் நடைபெற்றது. மருத்துவர் ஜெயராமன், விசிக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மக்கள் மருத்துவர் ச.தெட்சிணாமூர்த்தி பொதுமக்களுக்கு சிகிச்சை வழங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு ரஹ்மான், திசைகள் ஒருங்கிணைப்பாளர்கள் புகழேந்தி கவி கார்த்தி, தமுஎகச தோழர்கள் கஸ்தூரி ரங்கன் பீர்முகமது கவின் பாரதி பிரபா சிக்கந்தர் விஜயகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
100 நபர்கள் பயன் பெற்ற இந்த தோல் நோய் மருத்துவர் முகாமில் முனைவர் முபாரக் அலி அனைவரையும் வரவேற்றார் இறுதியாக தோழர் இந்துமதி நன்றி கூறினார்.