
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது சங்கமித்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது சங்கமித்தனர் முன்னாள் மாணவர்கள். அனைவரும் இணைந்து பள்ளிக்கு மாணவர்கள் அமர்ந்து உண்ணும் உணவு கூடம் மற்றும் வாகன நிறுத்துமிடம் சுமார் 15 லட்சம் மதிப்பில் பள்ளிக்காக அன்பளிப்பாக வழங்கினார். பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் தற்பொழுது நல்ல உயர்ந்த நிலையில் சிவகங்கை மாவட்ட நீதிபதி அறிவொளி , திருச்சி முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பாண்டியன் ஆகியோர் புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.அரசின் உயர் பதவியில் இருப்பார் சுமார் 40 க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் வெங்கடேசன் என்பவர் இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக தற்போது பொறுப்பில் உள்ளார் என்பது கூடுதல் சிறப்பான உள்ளது. இந்த சந்திப்பில் முன்னாள் மாணவர்கள் பலரும் தங்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.