
தொளசம்பட்டியில் ஓங்காளியம்மன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
சேலம் மாவட்டம் தொளசம்பட்டி சந்தைப்பேட்டை அருகே எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஓங்காளியம்மன் கோயிலில் ஓங்காளியம்மன் பண்டிகை முன்னிட்டு பூச்சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பூச்சாட்டுதல் நிகழ்ச்சியில் தினம்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மிகச் சிறப்பான முறையில் நடைபெறும். பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சத்தாபரம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓங்காளியம்மன் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் நடைபெற்றது இதனைத் தொடர்ந்து பூ கரகம் தீமிதி திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.