
திருநெல்வேலி ராதாபுரத்தில் தந்தை பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு! நேரில் பங்கேற்று, புகழ் அஞ்சலி செலுத்திய சபாநாயகர்!
திருநெல்வேலி,டிச.24:-
சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வருணாசிரம தர்மம் மற்றும் பெண்ணடிமை ஆகியவற்றிற்கு எதிராக போராடிய சமூக சீர்திருத்த வாதியும், திராவிடர் கழகத்தை தோற்றுவித்தவருமான தந்தை பெரியாரின் 51-வது ஆண்டு நினைவு தினம் இன்று [டிச.24] தமிழகமெங்கும் அனுஷ்டிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக, திருநெல்வேலி கிழக்கு மாவட்டம் ராதாபுரத்தில் அமைந்துள்ள “தந்தை பெரியார்” நினைவு சமத்துவப்புரத்தில் நிறுவப்பட்டிருக்கும், தந்தை பெரியாரின் “மார்பளவு” சிலைக்கு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் [சபாநாயகர்] மு.அப்பாவு, “மலர் மாலை” அணிவித்தும், “மலர்” தூவியும், “புகழ் அஞ்சலி” செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், ராதாபுரம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மி.ஜோசப் பெல்சி, திமுக மாணவர் அணி திருநெல்வேலி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, ராதாபுரம் ஒன்றிய அவைத் தலைவர் ராமையா, மாவட்ட திமுக பிரதிநிதிகள் கோவிந்தராஜ்,”சமூகை”.முரளி,ஒன்றிய துணைச் செயலாளர் ரமேஷ்துரை, ஒன்றிய குழு உறுப்பினர்கள் நடராஜன்,இசக்கிபாபு, படையப்பா, முருகன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ராதாபுரம் பொன் மீனாட்சி அரவிந்தன், சவுந்திரபாண்டியபுரம் முருகேசன் உட்பட பலர், கலந்துகொண்டனர். இதுபோல, பாளையங்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள, தந்தை பெரியாரின் முழு திருவுருவச்சிலைக்கு, தமிழக முன்னாள் அமைச்சரும், நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான டி.பி.எம். மைதீன் கான், பாளையங்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வகாப் உள்ளிடாடோர் “மலர் மாலைகள்” அணிவித்து, “மரியாதை” செலுத்தினர்.