June 8, 2025
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளிவிழாவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளிவிழாவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வெள்ளிவிழா ஆண்டின் துவக்க நிகழ்ச்சியாக கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதுவரை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் முகமது சதக் அறக்கட்டளையின் தலைவர் யூசுப் அவர்கள் கலந்து கொண்டு வெள்ளிவிழா ஆண்டின் துவக்கத்தை அறிவித்தார் இயக்குனர்கள் ஹபீப் முகமது மற்றும் பைசல் அப்துல் காதிர் ஆகியோர் விழாவிற்கு வாழ்த்துரை வழங்கினர் முன்னதாக கல்லூரியின் முதல்வர் முனைவர் ராஜசேகர் கல்லூரி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் வளர்ச்சி நிலை குறித்து விளக்கினார்.

கல்லூரியின் முன்னாள் மாணவியும் துணை தலைவியுமான சோபனா வரவேற்புரை நிகழ்த்தினார் இவ்விழாவில் இயக்குனர்கள் சதக் மற்றும் அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் இக்கல்லூரியில் பயின்று அரசு பணி மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோராக உள்ள முன்னாள் மாணவர்கள் தங்கள் கல்லூரி அனுபவத்தினை பகிர்ந்து கொண்டனர் இவ்விழாவில் கல்லூரியில் துறை தலைவரும் முன்னாள் மாணவருமான காசி குமார் நன்றி உரை கூறினார் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் சரவணன் சாகுல் ஹமீது முகமது அஜீஸ் ஜாபர் அலி சதாம் உசேன் சசிரேகா காதர் கனி சையது பெரோஸ் அலிகான் ருத்ர நாகராஜன் ஆகியோர் செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.