
வாணியம்பாடி,நவ.28- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆம்பூர் உட்கோட்டம், போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா ஆகியோர் கலந்துகொண்டு தலைகவசம் அணிவது அவசியம் குறித்து வாகன ஓட்டிகள் மற்றும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்றனர் அதனை தொடர்ந்து சாலையில் தலைகவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் அணிவித்து அவர்களுக்கு ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட காவல்துறையினர், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி,நவ.28- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் ஆம்பூர் உட்கோட்டம், போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா ஆகியோர் கலந்துகொண்டு தலைகவசம் அணிவது அவசியம் குறித்து வாகன ஓட்டிகள் மற்றும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி ஏற்றனர்
அதனை தொடர்ந்து சாலையில் தலைகவசம் அணியாமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் அணிவித்து அவர்களுக்கு ஹெல்மெட் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன், ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட காவல்துறையினர், வாகன ஓட்டிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.