
பழனி அருகே ஆயக்குடியில் திமுக சார்பில் துணை முதல்வர் பிறந்தநாள் விழா
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த ஆயக்குடி பேரூர் திமுக சார்பில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி வழிகாட்டுதலின்படியும் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் உத்தரவின் பேரிலும் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நந்தவனப்பட்டி பகுதியில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதனையடுத்து சந்தப்பேட்டை பகுதியில் கட்சி கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்தனர். இதனையடுத்து ஆயக்குடி பேரூராட்சியில் பணி செய்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு உணவு பொட்டலங்கள் வழங்கினர்.
இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சாமிநாதன் ஆயக்குடி பேரூர் செயலாளர் சின்னத்துரை ஆயக்குடி பேரூராட்சி தலைவர் மேனகா ஆனந்தன்
துணை தலைவர் சுதாமணி கார்த்திகேயன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி மகிழ்தனர்..
செய்தியாளர் : ராஜாமணி