
திருநெல்வேலியில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, 2-ஆம் நிலை காவலர்களுக்கு, பணிநியமன ஆணை வழங்கி, வாழ்த்து தெரிவித்த மாநகர காவல் ஆணையர்!
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய, 2023-ஆம் ஆண்டிற்கான 3,359 2-ஆம் நிலை காவலர், சிறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிக்கான தேர்வில், திருநெல்வேலி மாநகர பகுதியில், வெற்றி பெற்ற 23 தேர்வாளர்களுக்கு, பாளையங்கோட்டை ஹைகிரவுண்ட் பகுதியிலுள்ள, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து, மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, பணி நியமன ஆணைகளை வழங்கி, சிறப்புடன் பணியாற்றுமாறு அறிவுரைகள் வழங்கி, வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகர காவல் துணை ஆணையர் [தலைமையிடம்] G.S.அனிதா மற்றும் காவல் அதிகாரிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.