
திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள், கடலில் சென்று மீன்பிடிக்க, 5 நாட்களுக்கு தடை விதித்துள்ள, மாவட்ட நிர்வாகம்!
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த, தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளதால், இன்று [நவ.25] முதல், வருகிற 29- ஆம் தேதி வரையிலும், காற்றின் வேகம் அதிக பட்சமாக 75 கிலோமீட்டர் வரை வீசக்கூடும்! என்பதால், திருநெல்வேலி மாவட்ட, நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம்! என, ராதாபுரம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர், அறிவித்துள்ளார்.