April 20, 2026
திண்டுக்கல் மாவட்டத்தின் அன்பான வாக்காளர் பெருங்குடி மக்களே... வணக்கம்.

திண்டுக்கல் மாவட்டத்தின் அன்பான வாக்காளர் பெருங்குடி மக்களே... வணக்கம்.

சட்டமன்றத் தேர்தல் திருவிழா வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி 2301 வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 25000 அரசு அலுவலர்கள் தேர்தல் பணியில் மும்முறமாக ஈடுபட்டு, சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஒரு வாக்கு சாவடியில் வாக்காளர் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து வாக்காளர்களின் நலனுக்காகவும் முதல் தலைமுறை வாக்காளர்கள் எளிதில் அறிந்து கொள்ளவும், செயல்முறை வீடியோ திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

வாக்காளர் நலனுக்காக அதிக அளவில் அனைத்து சமூக ஊடகங்களிலும் whatsapp குழுக்களுக்கும் பகிரவும்.

நமது வாக்கு நமது உரிமை 100% சதவீதம் வாக்களிப்போம்.

நன்றிகளுடன்.

இப்படிக்கு
S.சரவணன். IAS. மாவட்ட தேர்தல் அலுவலர்
மற்றும்
மாவட்ட ஆட்சித் தலைவர் திண்டுக்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *