April 17, 2026
தவெக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த திருமலை!

தவெக சார்பில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த திருமலை!

மடத்துக்குளம் : ஏப்ரல் 04

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை அடுத்து முக்கிய கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அந்தந்த தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருமலை போட்டியிடும் போவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு செய்திருந்தார்‌.

இந்நிலையில், இன்று மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கட்சி தொண்டர்களுடன் வந்த தவெக வேட்பாளர் திருமலை வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முதல்முறை வேட்புமனு தாக்கல் செய்வதால் வேட்பாளர் திருமலை பதட்டத்துடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *